தமிழ் சினிமாவில் நகைச்சுவை புயலாக வலம் வரும் “வைகை புயல்” வடிவேலுவின் புகழை குறித்து நாம் தனியாக கூறத்தேவையில்லை. டி.ராஜேந்தரின் “என் தங்கை கல்யாணி” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் வடிவேலு காலடி எடுத்து வைத்தாலும், ராஜ்கிரணின் “என் ராசாவின் மனசுல” திரைப்படம் அவரை காமெடியனாக அறிமுகப்படுத்தியது.

தொடக்கத்தில் பல திரைப்படங்களில் கவுண்டமணி-செந்தில் ஆகியோருடன் சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்தார் வடிவேலு. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிங்கிளாக நகைச்சுவையில் கலக்கத்தொடங்கிய வடிவேலு, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக ஆகிப்போனார். தமிழ் சினிமா உள்ளவரை வடிவேலுவின் காமெடி காட்சிகள் நிலைத்திருக்கும். சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்களுக்கு கடவுளாக விளங்குபவர் வடிவேலு. அந்தளவுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் ஒன்றாக கலந்துவிட்டார்.
எனினும் சமீப காலமாக வடிவேலுவுடன் பல காமெடி காட்சிகளில் இணைந்து நடித்த சிஸர் மனோகர், முத்துக்காளை, மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் வடிவேலுவை குறித்து பல பேட்டிகளில் கடுமையாக விமர்சித்து வந்தனர். “வடிவேலு தன்னுடன் இருப்பவர் யாரையும் வளரவிடமாட்டார். அவர்களின் வாய்ப்புகளை பறித்துக்கொள்வார்” என பல குற்றச்சாட்டுகளை அடிக்கினார்கள்.

இதனிடையே சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான பயில்வான் ரங்கநாதன், தனது வீடியோ ஒன்றில், “வடிவேலு தன்னுடன் நடிக்கும் நடிகைகளை அழைத்துக்கொண்டு இரவு பண்ணை வீட்டிற்கு சென்றுவிடுவார்” என கூறினார். இவ்வாறு வடிவேலுவை குறித்து பலர் விமர்சித்து வர, வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்த டெலிஃபோன் ராஜ், சமீபத்திய பேட்டி ஒன்றில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடுமையாக பேசியுள்ளார்.
“வடிவேலு குறித்து பலரும் அவதூறாக பேசுகிறார்கள். அவருடன் நடித்தவர்களே அப்படி பேசுகிறார்கள். அவர்கள் எல்லாருமே வடிவேலுவால் வளர்ந்தவர்கள். வடிவேலு இல்லை என்றால் அவர்கள் இல்லை. வடிவேலுவால்தான் நாம் வளர்ந்தோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்” என கூறிய டெலிஃபோன் ராஜ்,

“வடிவேலு நடிகைகளை அழைத்து பண்ணை வீட்டிற்கு சென்றுவிடுவார் என பயில்வான் படுமோசமாக பேசுகிறார். வடிவேலு யாரை கூப்பிட்டு பண்ணை வீட்டிற்கு போனால் இவருக்கு என்ன. வடிவேலுவால் அந்த நடிகையை அழைத்துச் செல்ல முடிகிறது. இவரால் யாரையும் அழைத்து செல்ல முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பேசுகிறாரா? ஒரு வசனத்தை கொடுத்தால் பயில்வான் ரங்கநாதனால் பேசக்கூட தெரியாது. பணத்திற்காக யூட்யூப்பில் கண்டதையும் பேசி வருகிறார்” என பயில்வான் ரங்கநாதனை குறித்து மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.





