விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக, ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பகிரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக அனைத்து தரப்பினரையும் கவரவில்லை. அதன் பிறகு வெளியான திரைப்படங்களும் படுதோல்வியையே சந்தித்தன. இப்படியான சூழலில் தான் அவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தை எடுத்தார்.
டைம் டிராவல் கான்செப்ட் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எஸ்.ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பு மற்றும் எந்தவித குழப்பமும் இல்லாத திரைக்கதை ஆகியவற்றால் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு காரணம் அஜித் தான் என்று ஆதிக் கூறியிருந்தார். மேற்கொண்ட பார்வை திரைப்படத்தின் சூட்டிங் இன் போது, ஒரு பெரிய படத்தை எடுக்குமாறு அஜித் அறிவுறுத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தை இயக்கியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழலில் குட் பேட் அக்லியில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.
இதன் சூட்டிங், சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் ஜப்பான் நாட்டில் இதனை படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார். இப்படியான சூழலில், இந்த திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே, ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதே போல் மாவீரன் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





