- Advertisement -
Homeபொழுதுபோக்குஜூன் 22ம் தேதி தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்குது - அதை பிளான் பண்ணி...

ஜூன் 22ம் தேதி தளபதி ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்குது – அதை பிளான் பண்ணி தான் இதை பண்ணப் போறாங்களா? – போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது தனது 69வது படம் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது கடைசி படம் என்று ஏற்கனவே அவர் திட்டவட்டமாக அறிவித்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்தில் 2026, ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இன்னும் ஏறக்குறைய 9 மாதங்கள் இருக்கின்றன.

இதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதன் முறையாக விஜய் சிவகார்த்திகேயன் படங்கள் மோதுகின்றன. ஆனால் விஜய்தான் எப்போதுமே வசூல் மன்னனாக இருந்து முதல் நாள் வசூலிலும் உலக அளவில் மொத்த வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதுவும் இது விஜயின் கடைசி படம் என்பது மட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகம் தலைவராக அரசியலில் 2026 சட்டசபை தேர்தலை விஜய் சந்திக்க போவதற்கு முன்பாக வெளியாகும் கடைசி படமாகவும் இது அமைந்திருக்கிறது. அதனால் ஜனநாயகன் படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆர்வமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் அதிக கவனம் பெற்ற படமாக உள்ளது.

இந்நிலையில் வருகிற ஜூன் 22ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளாகும். இந்த நாளில் கடந்தாண்டு அவர் நடித்த தி கோட் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. அதே போல் இந்த முறையும் அவரது பிறந்த நாளில் வருகிற ஜூன் 22ம் தேதி ஜனநாயகன் படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழுவும், நடிகர் விஜயும் முடிவு செய்துள்ளனர்.

ஜனநாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் 6 மாதங்களுக்கு முன்பாக விஜய் பிறந்த நாளில் இந்த பாடல் வெளியானால் படம் ரிலீஸாகும் போது இந்த பாட்டுக்கு படத்தில் பெரிய எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைக்காதே என ஒரு தரப்பினர் கருதினாலும் அதிலும் விஜய் தரப்பு கவனமாகவே இருக்கின்றனர்.

அதாவது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியான கட்சி கொள்கை பாடல் தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது பாடல் போல இந்த பர்ஸ்ட் சிங்கிள் பாடலும் கட்சி கொள்கை பாடல் போலவே இருக்கும். அதனால் விஜய் அரசியல் கட்சி கூட்டங்களிலும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் ஒலித்தால் ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியே ஏற்படும். அதே பாடல் ஜனநாயகன் படத்தில் திரையில் வரும்போது தியேட்டரில் விசில் சத்தம் அனல் பறக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. அதனால் விஜய் பிறந்த நாளில் அந்த பாடல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

சற்று முன்