- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது படத்தின் வியாபாரத்துக்கே வில்லனாக மாறிய நடிகர் விஜய் சேதுபதி - கடந்தாண்டில் மகாராஜாவாக ஜெயித்தவருக்கு...

தனது படத்தின் வியாபாரத்துக்கே வில்லனாக மாறிய நடிகர் விஜய் சேதுபதி – கடந்தாண்டில் மகாராஜாவாக ஜெயித்தவருக்கு இப்போ இப்படி ஒரு சிக்கலா?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த படம் தலைவன் தலைவி. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார். பசங்க மெரினா எதற்கும் துணிந்தவன் நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜன் தலைவன் தலைவி படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இருந்து பொட்டல முட்டாயே என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 50வது படம் மகாராஜா. குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

மகாராஜா படம் தமிழ்நாட்டில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட படமாக உலகளவில் கடந்தாண்டில் 100 கோடி ரூபாயை வசூலித்து இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் மகாராஜா படத்தின் தியேட்டர் ஷேர் 20 கோடி ரூபாயை தாண்டியது குறிப்பிடத்தக்கது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபமும் கிடைத்தது.

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் படம் வெளியாகி பலத்த தோல்வியை சந்தித்தது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் வசூலில் மிகவும் பின்தங்கியது. இதனால் தமிழ்நாட்டில் ஏஸ் படத்தின் ஷேர் வெறும் 2 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது. அதனால் இப்போது தலைவன் தலைவி படத்தை அதிக விலை கொடுத்து வாங்க தமிழ்நாட்டில் வினியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள். ஏனென்றால் மகாராஜா படத்துக்கு முந்தைய விஜய் சேதுபதி படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை.

- Advertisement -

மகாராஜா படம் மட்டுமே பெரிய லாபத்தை கொடுத்தது. அதே நேரத்தில் ஏஸ் படம் மிகப்பெரிய பிளாப் ஆக இருந்த நிலையில் தலைவன் தலைவி படத்துக்கு அதிக விலை தருவதா என்று விநியோகஸ்தர்களுக்கு பயங்கர குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பல வெற்றிப் படங்களை தந்த பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி நித்யா மேனன் இணைந்து நடித்து சத்யஜோதி பிலிப்ஸ் தயாரிப்பு, சந்தோஷ நாராயணன் இசை என படத்துக்கு பிளஸ் பாயிண்டுகள் நிறைய உள்ளது.

அதனால் தலைவன் தலைவி படத்துக்கு வினியோகஸ்தர்கள் அதிக விலை கொடுக்க முன் வரலாம் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மகாராஜா படத்துக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் ஏஸ் படத்துக்கு சிறிதும் கிடைக்காத நிலையில், தலைவன் தலைவி படத்தை வியாபாரம் செய்வதில் தொடர்ந்து பலத்த சிக்கல் நீடிக்கிறது. கடைசியில் விஜய் சேதுபதியே ஏஸ் படம் மூலம் அவரது தலைவன் தலைவி படத்துக்கு வில்லனாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்