- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருவனந்தபுரம், திருநெல்வேலியை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி எங்கு செல்கிறார் தெரியுமா... ஞானவேலின் அசத்தல்...

திருவனந்தபுரம், திருநெல்வேலியை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ரஜினி எங்கு செல்கிறார் தெரியுமா… ஞானவேலின் அசத்தல் திட்டம்…

- Advertisement -

ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் படு உற்சாகத்தில் இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையொட்டி அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி இருக்கும் அவர், நடிப்பிலேயே தொடர்ந்து முழு கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால்சலாம் படத்தில் அவர் நடித்து முடித்தார்.

இந்த படம் மற்றும் இதற்கு அடுத்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என இரண்டையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இதில் லால் சலாம் படத்தில் கதாபாத்திரத்தில் வருகிறாராம் ரஜினிகாந்த். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கும் இந்த திரைப்படத்தில் அவர் வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் பொங்கலன்று வெளியாக அதன் வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் கவனம் செலுத்தி வருகிறார். என்கவுண்டர் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

இதில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் வருகிறாராம். ஆரம்பத்தில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு துளியும் இல்லாமல் இருந்த நிலையில், தலைவர் 170-க்கான கதாபாத்திர தேர்வு மிகப்பெரிய ஆவலை தூண்டியது. ஜெயிலர் திரைப்படத்தை போலவே இந்த படத்திலும் மலையாளம் தெலுங்கு ஹிந்தி பிரபலங்கள் நடிக்கின்றனர்.

பாலிவுட் பிரபலம் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ரஜினியின் மகனாக பகத் பாசில் வருகிறாராம். வில்லனாக ராணா நடிக்கிறாராம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.

பிறகு அடுத்த ஷூட்டிங் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்தை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கு நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டார். இந்த நிலையில் அடுத்ததாக மும்பையில் படப்பிடிப்பை நடத்த ஞானவேல் திட்டமிட்டு இருக்கிறார். அங்கு அமிதாப்பச்சன் உடன் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். சூட்டிங் பணிகள் விரைவாக முடிவடையும் என கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு மே மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்