“தளபதி 68” திரைப்படம் குறித்து சமீப நாட்களாக பல தகவல்கள் நாளுக்கு நாள் வெளிவந்துகொண்டே இருக்கிறது. இத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் எனவும் இத்திரைப்படத்திற்காக விஜய் 200 கோடிகள் சம்பளம் வாங்க உள்ளதாகவும் ஒரு செய்தி பரவியது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டில் வைத்துள்ளதாகவும் இந்த டைட்டிலுக்கும் கிரிக்கெட் வீரர் தோனிக்கும் ஒரு சம்பந்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கிரிக்கெட் வீரர் தோனி இப்போது சினிமா தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார். தமிழில் ஹரீஷ் கல்யாணை வைத்து “LGM” என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் தோனி. ஏற்கனவே நயன்தாரா, விஜய் ஆகியோரை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது. மேலும் விஜய்க்கும் தோனிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உண்டு.

இந்த நட்பை மனதில் வைத்துக்கொண்டுதான் விஜய், “தளபதி 68” திரைப்படத்தின் டைட்டிலை முடிவுசெய்துள்ளாராம். அதாவது “தளபதி 68” படத்திற்கு CSK என்ற டைட்டிலை விஜய் கூறியுள்ளாராம். இந்த டைட்டிலை உறுதிபடுத்தலாமா வேண்டாமா என்ற விவாதத்தில் தற்போது படக்குழு இறங்கியுள்ளதாம். இவ்வாறு ஒரு செய்தி வெளிவருகிறது.
விஜய் தற்போது நடித்து வரும் “லியோ” திரைப்படம் இன்னும் வெளிவராத நிலையில் “தளபதி 68” குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதால் ரசிகர்கள் பலரும் டபுள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் தற்போது “தளபதி 68” திரைப்படத்தின் டைட்டில் CSK என்று பரவி வருகிறது. இந்த டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறிவருகின்றனர்.





