- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 வந்து கத்தி, துப்பாக்கி மாதிரிலாம் இருக்காதாம்... விஜய்க்காக ரூட்டை மாற்றிய வெங்கட் பிரபு......

தளபதி 68 வந்து கத்தி, துப்பாக்கி மாதிரிலாம் இருக்காதாம்… விஜய்க்காக ரூட்டை மாற்றிய வெங்கட் பிரபு… ரசிகர்கள் ஏற்பார்களா…

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதற்கான ப்ரீ புக்கிங் அதற்குள்ளையும் வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது.

வாரிசு படத்தை விட, லியோவிற்கு கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இதனை எல் சி யு கொண்டு வந்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நீடிக்கிறது.

லியோ குறித்து பேசிய அதன் தயாரிப்பாளர் லலித் குமார், வரும் வாரத்திலிருந்து படம் ரிலீசாகும் வரை அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும். இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில்தான் நடைபெறும் என்று கூறினார். இந்த நிலையில், லியோவிலிருந்து அடுத்த பாடல் வரும் 18ஆம் தேதி வெளியாக உள்ளதாம். முதல் பாடலான நான் ரெடிதான் பாடலை விஜய் பாடியதை போல, இதனை படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பாடியிருக்கிறாராம்.

இதன் நடுவே விஜய்யின் அடுத்த படத்திற்கான வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 30ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் நிலையில், அதற்கு அடுத்த நாளான அக்டோபர் 1ம் தேதி தளபதி 68-க்கான பட பூஜை தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் தோற்றத்தை புதுமையாக காட்டுவதற்காக வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கலிபோர்னியா சென்றனர். அங்கு 3டி டெக்னாலஜியில் பணிகள் நடைபெற்றன. அப்போது தி ஈக்வலைசர் 3 படத்தை காண திரையரங்கிற்கு சென்ற விஜய், டென்சல் வாஷிங்டன் வரும் காட்சியில் விஜய் எழுந்து நின்று கைகளை தூக்கி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்த படத்திலும் தனது ஆஸ்தான அணியை களம் இறக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம். சிம்ரன், பிரியங்கா மோகன், ஜெய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இதில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தி, துப்பாக்கியை போல இல்லாமல் விஜய்க்கே மிக வித்தியாசமாக இந்த படம் இருக்கும் என்றும், குடும்பங்கள் பார்க்கும் திரைப்படமாக இதனை வெங்கட் பிரபு இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தளபதி 68 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்