- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 படத்தில், யுவன் இசையில் நடக்கப்போகும் அந்த மேஜிக்... ரசிகர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து...

தளபதி 68 படத்தில், யுவன் இசையில் நடக்கப்போகும் அந்த மேஜிக்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து என்ன…

- Advertisement -

கோலிவுட்டில் தனக்கென தனி சாம்ராஜியத்தையே உருவாக்கி கொடி கட்டி பறப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், அங்கிருந்து படிப்படியாக உயர்ந்து இன்று யாரும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறார். விஜய்யின் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தையே பெற்றாலும், அது எப்போதும் வசூலில் குறை வைக்காது என்பதால் அவரது படத்திற்கென தனி மார்க்கெட் இங்கு உள்ளது.

நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்தில் கலக்கும் அவர், சில பாடல்களை பாடியும் நம்மை உற்சாகப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்திலேயே படங்களில் நடித்து வந்த விஜய், அப்போது கிடைத்த வாய்ப்புகளில் பாடல் பாடி வந்தார். விஷ்ணு படத்தில் இடம்பெற்ற தொட்டபெட்ட ரோட்டு மேல் முட்டை பரோட்டா பாடலை விஜய் பாட, திரையில் “இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் விஜய்” என்று அறிவிக்கப்படும்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடி வந்த விஜய், திடீரென அதற்கு முழுக்கு போட்டார். மீண்டும் விஜய் பாட மாட்டாரா என ரசிகர்கள் ஏங்கி கொண்டிருக்க, துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற கூகுள் கூகுள் பாடல் மூலம் மீண்டும் அவரை மைக் முன்பு நிறுத்தினார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். அங்கிருந்து விஜய்யின் பாடல் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி பாடல், தலைவா படத்தில் வாங்கண்ணா பாடல்,
பைரவாவில் பாப்பா பாப்பா பாடல், பிகில் திரைப்படத்தில் வெறித்தனம் பாடல், மாஸ்டரில் குட்டி ஸ்டோரி, பீஸ்ட்டில் ஜாலியோ ஜிம்கானா, வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே என அவரது குரலில் பாடல்கள் முணுமுணுக்க வைக்க, கடைசியாக லியோவிலும் நா ரெடிதான் பாடலை பாடி அசத்தினார் தளபதி விஜய்.

இப்படியான சூழலில்தான் அவர் அடுத்ததாக வெங்கட்பிரபுவுடன் இணையும் படத்திலும் ஒரு பாடலை பாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கீதை திரைப்படத்திற்கு பிறகு, இந்த திரைப்படத்தின் மூலம் கிட்டதட்ட 20 ஆண்டுகள் கழித்து யுவன்சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இதில் பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மதன் கார்க்கி வரிகளில் உருவாகும் பாடலைத்தான் விஜய் பாடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் – யுவன் கூட்டணி எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தற்போது அதில் விஜய் பாடப்போகும் தகவல் அவர்களை குஷிபடுத்தியுள்ளது. இந்த படத்தில் டைம் டிராவல் பாணியில் உருவாகிறதாம். படத்தில் விஜய்க்கு பத்திரிகையாளர் வேடம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்