- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ டிரெய்லர்லாம் நல்லாதான் இருக்கு... ஆனா எதுக்கு அந்த கெட்ட வார்த்தை... தேவையில்லாமல் சர்ச்சையில் மூக்கை...

லியோ டிரெய்லர்லாம் நல்லாதான் இருக்கு… ஆனா எதுக்கு அந்த கெட்ட வார்த்தை… தேவையில்லாமல் சர்ச்சையில் மூக்கை நுழைத்த தளபதி விஜய்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடித்திருக்கும் திரைப்படம் லியோ. மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். பெரும்பாலான சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்ற நிலையில், வரும் 19ஆம் தேதி திரைப்படம் வெளியாவதால் அதற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே லியோவில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நா ரெடி தான் பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கான இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் வருத்தம் அடைய, உடனடியாக இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. எடுத்ததுமே காஷ்மீரில் அழகை கண் முன்னே காட்சிப்படுத்திய முன்னோட்டம் அடுத்தடுத்து ஆக்ஷனில் களமிறங்கியது. ஆக்சன் காட்சிகளுக்கு நிகராக விஜய்யின் வாய்ஸ் ஓவரும் ட்ரைலர் முழுக்க இடம்பெற்று இருந்தது.

எடுத்ததும் சீரியல் கில்லர் கதையை கூறும் விஜய், இப்போ அந்தத் துப்பாக்கி உன் கையில் கிடைச்சா என்ன பண்ணுவ என்ற கேள்வியுடன் கதையை நகர்த்துவது போல முன்னோட்டம் இருக்கிறது. இது போக காஷ்மீரில் தன்னை துரத்தும் ரவுடிகளை விஜய் சமாளிக்க முடியாமல் திணறுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது எல்லாம் தாண்டி டிரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தைதான், இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவுலகில் அதிகளவு குடும்ப ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஒரே நடிகர் விஜய். அவரது திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், விஜய் என்பதால் குடும்பம் குடும்பமாக மக்கள் திரையரங்குகளில் சென்று நிச்சயம் படம் பார்ப்பார்கள். இதுபோக குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான நடிகராக விஜய் விளங்குகிறார். தற்போது அரசியலில் களமிறங்குவதற்கும் அவர் காய்களை நகர்த்தி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில், ட்ரெய்லரில் இந்த கெட்ட வார்த்தை தேவை தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கதைக்கு அது தேவைப்பட்டாலும், இவ்வளவு பெரிய நடிகர் அதை அசால்டாக கூறலாமா எனவும் பலர் சாடி வருகின்றனர். இப்போதெல்லாம் ஒரு படத்தில் கெட்ட வார்த்தை வைப்பது ஃபேஷனாகிவிட்டது என்றும், இதில் விஜயும் விதிவிலக்கு அல்ல எனவும் கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே இந்த படத்தில் வாயில் சிகரெட்டுடன் நா ரெடி தான் பாடலுக்கு விஜய் வந்தது, சர்ச்சையை கிளப்பியது. தற்போது அதுக்கும் மேலாக விஜய் இப்படி கெட்ட வார்த்தை பேசி இருப்பது, இளைஞர்களை கெடுக்கும் விதமாக உள்ளது என பலரும் கூறி வருகின்றனர். உச்ச நட்சத்திரமான விஜய் இனிமேலாவது முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்