- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் கிடப்பில் போடப்பட்ட தனி ஒருவன் 2, தம்பி இப்போதான் சம்மதித்தார், இப்போ அண்ணன் முரண்டு...

மீண்டும் கிடப்பில் போடப்பட்ட தனி ஒருவன் 2, தம்பி இப்போதான் சம்மதித்தார், இப்போ அண்ணன் முரண்டு பிடிக்கிறாரே? – சோணமுத்தா போச்சா?

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடித்த படங்களில் மிக மிக முக்கியமான படமாக, அவரது சினிமா வாழ்க்கையில் அமைந்த படம் தனி ஒருவன். கடந்த 2015ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியான இந்த படம், பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியான 10 நாட்களில், உலகம் முழுவதும் 51.08 கோடி ரூபாய் வசூலித்தது. 9 ஆண்டுகளுக்கு முன் இது மிகப்பெரிய வசூல் சாதனையாகும்.

தனி ஒருவன் ரிலீஸான 18 நாட்களில் மொத்தம் ரூ. 74.86 கோடி என்ற வசூலை கடந்திருந்தது. அந்த அளவுக்கு தனி ஒருவன் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஜெயம் ரவி ஐபிஎஸ் அதிகாரியாகவும், நயன்தாரா அவரது காதலியாகவும் நடித்திருந்தார். வில்லன் கேரக்டரில் அரவிந்த் சாமி மிகவும் மாறுபட்ட நடிப்பில் அசத்தியிருந்தார்.

- Advertisement -

தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்த நிலையில், படத்தின் இயக்குனர், ஜெயம் ரவியின் அண்ணனான மோகன் ராஜா, ஆர்வமாக இருந்தார். ஆனால் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆனதால், தனி ஒருவன் 2 படம் உருவானது தள்ளி தள்ளிப் போனது. இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.

ஆனால் தனி ஒருவன் படத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த சில படங்கள் ஓரளவு வெற்றி படங்களாக இருந்தாலும், தனி ஒருவன் படம் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெறவில்லை. அதே போல் சமீபமாக ஜெயம் ரவி படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன. அகிலன், இறைவன், சைரன் என படங்கள் தொடர்ந்து பிளாப் ஆகி வருகின்றன.

- Advertisement -

தோல்வி படங்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் தந்த ஜெயம் ரவியையும், இயக்குனர் மோகன்ராஜாவையும் அழைத்த தனி ஒருவன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், இந்த ஆண்டு இறுதிக்குள் தனி ஒருவன் 2 வந்தாக வேண்டும். உடனடியாக படத்தை ஆரம்பியுங்கள் என, கண்டிசனாக பேசியதை அடுத்து அதற்கான பணிகளில் இயக்குனர் மோகன்ராஜா இறங்கினார். ஜெயம் ரவியும் அந்த படத்தில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி தந்தார்.

இதையடுத்து தனி ஒருவன் 2 படத்துக்காக ரூ. 120 கோடி பட்ஜெட்டில் கதை சொல்லி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை திடுக்கிட வைத்திருக்கிறார். ஜெயம் ரவியின் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி அவரை வைத்து ரூ. 120 கோடி பட்ஜெட் வேண்டாம், ரூ. 70 கோடி பட்ஜெட்டில் கதையை மாற்றுங்கள் என்று தயாரிப்பு நிறுவனம் கூறியதை ஏற்க மறுத்த மோகன் ராஜா, ரூ. 10 கோடி குறைத்து ரூ. 110 கோடி பட்ஜெட்டுக்கு வந்திருக்கிறார். அவர் முரண்டு பிடிப்பதை பார்த்த ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம், தனி ஒருவன் 2 படத்தை இப்போது எடுக்க வேண்டாம், கிடப்பில் வையுங்கள், ஜெயம் ரவி படங்கள் பெரிய ஹிட் ஆகட்டும், அதன்பிறகு பார்க்கலாம் என கை விரித்த விட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்