- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூரியின் அடுத்த படம் துவக்க விழா - படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன்...

நடிகர் சூரியின் அடுத்த படம் துவக்க விழா – படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் வெற்றிமாறன்!

- Advertisement -

மண்டாடி படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சூரி தனது அடுத்த படத்தில் நடிக்கிறார். நேற்று இன்று நாளை அயலான் படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் இந்த புதிய படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு சூரி 7 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் துவக்க விழா பூஜை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க மண்டாடி படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் வெற்றிமாறன் மதிமாறன் கீர்த்தீஸ்வரன் ஏஆர்கே சரவணன் நலன் குமாரசாமி மித்ரன் ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

சற்று முன்