- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலிப்படையால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் - தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பு

கூலிப்படையால் தாக்கப்பட்ட பிரபல நடிகர் – தமிழ் சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பு

- Advertisement -

காரில் சென்ற பிரபல சினிமா நடிகரை கூலிப்படையினர் தாக்கியதால், அவர் பலத்த காயமடைந்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சீனியர் நடிகர் தாக்கப்பட்ட சம்பவம், கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மோகன் சா்மா, நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வயது 70 ஆன நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஹீரோயின்களுக்கு தந்தை கேரக்டரில் அதிகமாக இவர் நடித்து வருகிறார். பார்த்திபன் கனவு, சச்சின், விண்ணுக்கும் மண்ணுக்கும், அப்பு, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மோகன் சர்மா, தமிழ் படங்களில் மட்டுமின்றி நிறைய டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். அப்பா, கோலங்கள், ராஜ ராஜேஸ்வரி, வரம், வாணி ராணி உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்து வருகிறார். கேரளாவை பூர்வீிமாக கொண்ட மோகன் சர்மா, நடிகர் மட்டுமல்ல. சினிமா தயாரிப்பாளர், கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார்.

இந்நிலையில், தி நகரில் இருந்து சேத்துப்பட்டில் இருக்கும் தனது காரில் மோகன் சர்மா சென்ற போது, அவரை வழிமறித்த 4 பேர் கும்பல், கடுமையாக தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து, சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில், தனது சொந்த வீட்டை விற்பதற்காக சில தரகர்களை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அதில் ஒருவர் மூலமாக அவரது வீட்டை விற்று இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மற்ற தரகர்கள், கூலிப்படை மூலம் மோகன் சர்மாவை தாக்கியதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் உள்ள ஒருவரை, அதுவும் 70 வயதான மோகன் சர்மாவை, கூலிப்படை தாக்கியிருப்பது, கோலிவுட் வட்டாரத்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சொந்த வீடு விற்பனை குறித்த முன்விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் அவர் தாக்கப்பட்டாரா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்