நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்போதுதான் கங்குவா படத்தை முடித்திருக்கிறார். ஹிஸ்டாரிக்கல் படமான இது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஏழாம் அறிவு படத்தின் ஆரம்ப காட்சிகளில், இளம் மன்னனாக நடித்து சூர்யா அசத்தியிருப்பார்.
இந்த படத்தை அடுத்து சூர்யா, வாடிவாசல் படத்தில் நடிக்க இருந்தார். அதில் அமீர் நடிப்பது உறுதி என்றதால், படம் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதைத்தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும், இந்தி படம் மற்றும் ஆங்கில படம் ஆகியவற்றில் நடிக்கவும் சூர்யா கமிட் ஆகியிருப்பதால், இப்போதைக்கு வேறு படங்களில் நடிக்க அவரிடம் தேதி இல்லை.
இப்போதுதான் அயலான் படத்தை முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை அடுத்து அவர் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ரஜினி 171 படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதனால் சிவகார்த்திகேயனும் பிஸிதான். அதே நேரத்தில் அயலான் 2 படத்தை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஆனால் வரும் பொங்கலுக்கு வரும் அயலான் படத்தின் வெற்றிதான் 2ம் பாகம் எடுக்கலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுக்க வைக்கும்.
இப்படி சூர்யா, சிவகார்த்திகேயன் இருவரும் பிஸியாக உள்ள நிலையில் புதிய படங்களில் கமிட் ஆக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, 50 லட்சம் ரூபாய் ரொக்கத்தை முன் பணமாக கொடுத்து நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்று சொன்னவர் சூர்யா. அவர் சொன்னது இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமாரிடம்தான் அப்படி சொன்னார். ஆனால் இதுவரை அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகும் சூர்யா, ரவிக்குமாரை வெயிட்டிங்கில் வைத்துள்ளார்.
அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் ரவிக்குமாரிடம் மீண்டும் கைகோர்க்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் சிவகார்த்திகேயனும் இப்போதைக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆக சூர்யாவும், சிவகார்த்திகேயனும் கைவிட்ட நிலையில், இப்போதைக்கு எந்த கமிட்மெண்டும் இல்லாமல் எப்படி இருப்பது என்ற தவிப்பில் இருந்த இயக்குநர் ரவிக்குமார் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அதாவது இப்போதைய சூழ்நிலையில் வெற்றிப்படங்களை கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில், அவரே நடித்து இயக்கும் ஒரு படத்தின் கதையை பாண்டிச்சேரியில் ரூம் போட்டு எழுதி வருகிறார். அவரை சென்று நேரில் சந்தித்த ரவிக்குமார் கதை சொல்லி இருக்கிறார். உடனே கதை பிடித்துப்போய் ஓகே சொன்ன லாரன்ஸ் விரைவில் படப்பிடிப்பை துவங்கலாம் என நம்பிக்கை தந்து அசத்தியிருக்கிறார். அந்த ரெண்டு பேர் வெயிட்டிங்கில் போட்டாலும் லாரன்ஸ் விரைவில் அழைப்பார் என, டைரக்டர் ரவிக்குமார் இப்போது ரிலாக்ஸாக இருந்து வருகிறார்.





