தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு ரஜினிகாந்த் கமல்ஹாசன் தான் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் சூப்பர் சீனியர்களாக பல சாதனைகளை செய்த நிலையில் இன்றைய தலைமுறை நடிகர்கள் அவர்களது சாதனைகளின் நிழல்களை கூட தொட முடியாது என்பதுதான் நிஜம்.
இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் இதுவரை 236 படங்களில் நடித்திருக்கிறார். இதில் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழி திரைப்படங்களும் அடங்கும். 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக துவங்கி இப்போது 70 வயதுகளை கடந்தும் ஹீரோவாக கமல் பவனி வருகிறார். அடுத்து தனது 237வது படத்தில் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதில் கமலுடன் அதிக படங்களில் நடித்தவர் என 5வது இடத்தில் இருப்பவர் நடிகை கௌதமி. இவர் அபூர்வ சகோதரர்கள் தேவர் மகன் நம்மவர் பாபநாசம் குருதிப்புனல் உட்பட 7 படங்களில் கமலுடன் கௌதமி நடித்திருக்கிறார். 4வது இடத்தில் இருப்பவர்கள் நடிகை ஸ்ரீவித்யா மற்றும் மாதவி. தமிழ் மற்றும் மலையாளத்தில் கமலுடன் 8 படங்களில் நடித்தவர் ஸ்ரீவித்யா.
அதே போல் நடிகர் கமலுடன் நடிகை மாதவி தமிழ் தெலுங்கு இந்தி என மொத்தம் 8 படங்களில் நடித்துள்ளார். அடுத்து 3வது இடத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா மற்றும் அம்பிகா உள்ளனர். இவர்கள் 2 பேருமே கமலுடன் தனித்தனியாக 9 படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர்.
நடிகை அம்பிகா சகலகலா வல்லவன் உயர்ந்த உள்ளம் விக்ரம் காதல் பரிசு காக்கிசட்டை என 9 படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்து 2வது இடத்தில் கமலுடன் அதிக படங்களில் நடித்தவர் கடந்த 80 90களில் நட்சத்திர நாயகியாக வலம் வந்த நடிகை ஸ்ரீப்ரியா தான். இவர் கமலுடன் மொத்தம் 24 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
நடிகர் கமலுடன் 27 படங்களில் ஜோடியாக நடித்து முதலிடத்தில் இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 16 வயதினிலே சிவப்பு ரோஜாக்கள் மூன்று முடிச்சு மூன்றாம் பிறை மீண்டும் கோகிலா வறுமையின் நிறம் சிவப்பு உட்பட மொத்தம் 27 படங்களில் கமலுடன் இணைந்து நடித்து முதலிடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீதேவி என்பது குறிப்பிடத்தக்கது.





