- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்த மும்பை தயாரிப்பு நிறுவனம்… சம்பளம் எவ்வளவு தெரியுமா? நடிகர்...

ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்த மும்பை தயாரிப்பு நிறுவனம்… சம்பளம் எவ்வளவு தெரியுமா? நடிகர் அஜீத்குமாரை காலம் இப்படி மாற்றி விட்டதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜீத்குமார். அவரது நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் குட் பேட் அக்லி. அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் தனது அடுத்த படத்தின் இயக்குனர் என்பதை ஏற்கனவே அஜீத்குமார் உறுதிபடுத்தி விட்டார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

கடந்தாண்டு முழுவதும் அஜீத்குமார் பல்வேறு நாடுகளில் நடித்த கார் ரேஸில் தீவிரமாக கலந்துக்கொண்டார். அதனால் கடந்த ஆண்டில் 12 மாதங்களையும் அவர் கார் ரேஸ் களத்திலேயே செலவிட்டார். அதனால் அவரது அடுத்த படம் உருவாகாமல் தடைபட்டது.

- Advertisement -

இதனால் நடிகர் அஜீத்குமார் நடிக்க வேண்டிய ஏகே 64 படத்துக்கு பல மாதங்களாக தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தனது சம்பளம் ரூ. 186 கோடி மற்றும் படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என்று அஜீத்குமார் மிகவும் பிடிவாதமாக இருந்ததால் அவரது படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதன் காரணமாக பல மாதங்களாக ஏகே 64 படப்பிடிப்பு துவங்காமல் தடைபட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சத்யஜோதி பிலிம்ஸ் என பல தயாரிப்பு நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அஜீத்குமார் தனது சம்பளம் ரூ. 186 கோடி என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். அதனால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் அஜீத்குமார் படம் எடுத்தால் பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் பின்வாங்கி விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மும்பையை சேர்ந்த பென்மீடியா தயாரிப்பு நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது. ஆனால் சில முக்கிய கண்டிஷன்களை அந்நிறுவனம் போட்டுள்ளது. அதன்படி இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 186 கோடி ரூபாய் எல்லாம் சம்பளம் தரமுடியாது.

இப்போது முதலில் அட்வான்ஸ் ஆக ரூ. 100 கோடி தருகிறோம். பிறகு லாபத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்கு தருகிறோம் என்று கூறியிருக்கின்றனர். இதையும் விட்டால் வேறு வழியில்லை என்பதை தெரிந்துக்கொண்ட நடிகர் அஜீத்குமாரும் உடனே ஓகே சொல்லி விட்டார். மொத்தம் 167 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏகே 64 படம் உருவாகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்