நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படம் தணிக்கை காரணமாக திரைக்கு இதுவரை வராத நிலையில் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் தடைபட்டுள்ளது. விரைவில் ஜனநாயகன் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தவெக சார்பில் கரூரில் பொதுக்கூட்டம் நடந்த போது விஜய் பங்கேற்ற அந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது ஜனநாயகன் படக்குழுவினர் அந்த காட்சிகளை சினிமா கேமராவை பயன்படுத்தி படம் பிடித்ததாகவும் ஒரு சர்ச்சை கிளம்பியது.
அப்போது இதுகுறித்து ஒரு தன்னிலை விளக்கமும் மறுப்பும் தர இயக்குனர் எச் வினோத் முன்வந்த நிலையில் விஜய் அதற்கு தடை விதித்தார். இது அரசியல். நீங்கள் ஒரு பொதுவான மனிதர். நாளை இதனால் உங்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் இந்த மறுப்பு அறிக்கை விளக்கம் எல்லாம் தர வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அதன்பிறகு இந்த சர்ச்சை அப்படியே நீர்த்து போன நிலையில் இப்போது சட்டசபை தேர்தல் தேதி நெருங்கும் சமயத்தில் மீண்டும் அதே பிரச்னையை சிலர் கையில் எடுத்து, கரூர் சம்பவத்தின் போது அங்கு ஜனநாயகன் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அங்கு படத்தின் ஒளிப்பதிவாளர் இயக்குனர் எல்லாம் இருந்துள்ளனர் என்று மீண்டும் பிரச்னையை கிளப்பி விட்டுள்ளனர்.
இது மீண்டும் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடிகர் விஜயை மட்டுமின்றி ஒரு திரைப்பட இயக்குனராக எச் வினோத்துக்கும் அவப்பெயரை தந்துள்ளது. இது முழுக்க முழுக்க கற்பனையாக ஒரு விஷயம் என்றும் அப்படி எந்தவிதமாக ஒரு சம்பவமும் அங்கு நடக்கவில்லை என்றும் தவெக தரப்பில் அக்கட்சி மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
எனினும் ஒரு தரப்பினர் மத்தியில் ஜனநாயகன் படக்குழு அங்கு இருந்துதான் அந்த கரூர் சம்பவ காட்சிகள் படம்பிடிக்கப்பட்டதா என்றும் சந்தேகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதனால் இயக்குனர் எச் வினோத் தரப்பில் இருந்து இதற்கான தன்னிலை விளக்கமும் மறுப்பு அறிக்கையும் தர தவெக தலைவர் விஜய் இப்போதாவது அனுமதிக்க வேண்டும். அதுதான் இயக்குனர் எச் வினோத்துக்கு எதிர்கால பிரச்னைகளை தவிர்க்க வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.





