இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி கடந்த 10ம் தேதி பொங்கலுக்கு வெளியானது. சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா முதல் தடவையாக இணைந்த இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஆனால் ரசிகர்களுக்கு போதிய திருப்தி தராத நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.
இந்த படத்தின் கதை இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் தமிழ்நாட்டில் நடத்திய போராட்டம் தான். அதனால் பராசக்தி படம் வேற லெவலில் இருக்கும் என்றுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் இயக்குனர் சுதா கொங்கரா படத்தை குழப்பி விட்டார். மாணவர்களின் உணர்ச்சி பூர்வமான போராட்ட கதைக்களத்தில் அழுத்தமாக திரைக்கதை இல்லை. அதில் காதலையும் கொண்டு வந்து சுதா சொதப்பி விட்டார் என்ற விமர்சனமும் எழுந்துது.
இதனால் பராசக்தி படம் ரசிகர்களுக்கு சரியாக கனெக்ட் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. நடிகர் ரவிமோகனின் வில்லத்தனமான நடிப்புக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதனால் இந்த படத்தை பொறுத்தவரை வில்லன் கேரக்டரில் ரவிமோகன் ஜெயித்திருக்கிறார். இதற்கிடையே பராசக்தி படம் வெளியான 2 நாட்களில் 51 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
ஆனால் பாக்ஸ் ஆபீஸ் கணக்குகளை வெளியிடும் ஒரு இணையதளம் பராசக்தி படத்தின் 5வது நாள் வசூல் நிலவரத்தை தெரிவித்துள்ளது. அதன்படி பராசக்தி படத்தின் 5வது நாள் வசூல் நிலவரம் இந்தியாவில் 2.35 கோடி ரூபாய் என்பது தெரிய வந்துள்ளது. இது எஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது. கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படம் கடந்த 14ம் தேதி வெளியானது. எனவே ரசிகர்களின் பாதி கூட்டம் கார்த்தி படம் பார்க்க சென்றதால் பராசக்தி படத்தின் வசூல் சரிந்து விட்டது என்றும் தெரிய வந்துள்ளது.
அடுத்து பொங்கல் களத்தில் நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் பராசக்தி படத்துக்கு வா வாத்தியார் படமும் தலைவர் தம்பி தலைமையில் படமும் பராசக்திக்கு போட்டியாக இருக்கின்றன. அதனால் வரும் நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் ரேஸில் இருந்து பராசக்தி படம் கண்டிப்பாக காணாமல் போய்விடும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
நடிகர் ஜீவா நடித்திருக்கும் தலைவர் தம்பி தலைமையில் படம் அவருக்கு சூப்பர் கம்பேக் என்று சொல்லப்படுகிறது. ஜனரஞ்சகமான கதைக்களத்தில் காமெடி கலந்த படமாக கலகலப்பாக டிடிடி இருக்கிறது. இந்த படத்துக்கு வரவேற்பும் ஆதரவும் இருப்பதால் கணிசமான வசூல் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பராசக்திக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில் கார்த்தி ஜீவா படங்களும் வந்தததால் பராசக்தி வசூலில் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது என்கிற தகவல் வெளியாகி உள்ளது.





