- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் அப்படி ஒரு சம்பவத்தை செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்… இப்படி ஒரு சென்டிமென்டா...

கூலி படத்தில் அப்படி ஒரு சம்பவத்தை செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்… இப்படி ஒரு சென்டிமென்டா என அசந்துபோன ரஜினிகாந்த்!

- Advertisement -

மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் லியோ படங்களை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் கூலி. நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

நேற்றிரவு சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள அமீர்கான் நாகர்ஜூனா சௌபின் சாஹிர் உபேந்திரா சத்யராஜ் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, இந்த படம் வெளியாகி ஒரு வாரத்துக்கு சௌபின் சாகிர் தான் பேசு பொருளாக இருப்பார். கன்னட நடிகர் உபேந்திரா இந்த படத்துக்காக நிறைய செய்திருக்கிறார். நடிகர் நாகார்ஜுனாவை பார்த்து தான் நான் தலையில் பங்க் வளர்க்க ஆரம்பித்தேன்.

ரஜினி சாரை பற்றி இந்த மேடையில் பேச ஒரு மணி நேரம் பத்தாது. ஆனால் நேரம் காரணமாக குறைவாக பேசுகிறேன். என்னுடைய வாழ்க்கையில் மாற்றம் நிதானம் அமைதியானது என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த் சார்தான். ரஜினி சார் அவரது பழைய படங்களில் கையில் இருக்கும் பேட்ஜ் எண் 777 ஆக இருக்கும் அல்லது 786 ஆக இருக்கும்,

ஆனால் கூலி படத்தில் அவரது கையில் அணிந்துள்ள கூலி பேட்ச் 5821 என்று மாற்றி வைத்தேன். ஒருநாள் ரஜினிகாந்த் சார் அழைத்து இதுபற்றி என்னிடம் கேட்டார். அது என்ன 5821? அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கா என என்னிடம் கேட்டார். சார் என்னுடைய அப்பாவின் பேட்ஜ் எண் 5821. என்னுடைய அப்பா பஸ் கண்டக்டர் என்றும் சொன்னேன்.

உங்க அப்பா பஸ் கண்டக்டர் என்பதை என்னிடம் நீங்க சொல்லவே இல்லையே என்றார். ஒருநாள் நீங்கள் கேட்பீர்கள் அது மெமரிபில்லாக இருக்கும் என்று நினைத்தேன் என்று அவரிடம் சொன்னேன் என்று அந்த விழாவில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தும் ஆரம்பத்தில் பஸ் கண்டக்டராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்