- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் என் மனைவியை விட அதிக முறை ஐ லவ் யூ சொன்னது அவருக்கு தான்...

நான் என் மனைவியை விட அதிக முறை ஐ லவ் யூ சொன்னது அவருக்கு தான் – இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

திரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அடுத்து சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்த படத்துக்கு டிரிபிள் ஏ என்ற பெயரும் உண்டு. இந்த படமும் சரியாக ஓடவில்லை.

இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. கடந்த 2024ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதில் விஷால் எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். டைம் டிராவல் கதைக்களத்தில் உருவான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இதில் விஷால் நாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர். தொடர்ந்து தோல்வி படங்களை தந்த நடிகர் விஷாலுக்கு இந்த படம் கம் பேக் படமாகவும் அமைந்தது. ஆனால் இந்த படத்தை பொருத்த வரை நடிப்பு அரக்கன் என டைட்டில் சூட்டப்பட்ட எஸ்ஜே சூர்யா தான் நடிப்பில் வேற லெவல் காட்டியிருந்தார்.

அவரது நடிப்புதான் இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பெரிய பக்கபலமாக அமைந்தது. இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில்தான். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் அஜீத்குமார் வழங்கினார். எனினும் கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

கடந்த 10ம் தேதி வெளியான குட் பேட் அக்லி படம் ரூ. 200 கோடியை கடந்து வசூலில் அசத்தி வருகிறது. அஜீத்குமாரின் மிக தீவிரமான ரசிகராக இந்த படத்தை காட்சிக்கு காட்சி அஜீத்குமாரின் பெருமையை புகழை பாடும் ஒரு படமாக தீனா பில்லா வரலாறு அமர்க்களம் மங்காத்தா படங்களில் ரெபரென்ஸ் ஆக உருவாக்கி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, இன்று நான் உங்கள் முன் நிற்பதற்கு முக்கிய காரணம் அஜித்குமார் தான். அவருக்கு இந்த இடத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எனது மனைவியிடம் ஐ லவ் யூ சொன்னதை விட அஜீத் சாருக்கு ஐ லவ் யூ சொன்னதுதான் அதிகம். என் மனைவியை விட உங்களைத்தான் நான் அதிகம் நேசிக்கிறேன். எனது பெற்றோருக்கு அடுத்து என் வாழ்க்கையில் இருப்பது நீங்கள்தான் அஜீத்குமார் சார் என்று பேசி இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்