தமிழ் சினிமாவில் ராஜா ராணி படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். குருவின் பெயரைக் காப்பாற்றும் சிஷ்யனாக தனது முதல் படம் ராஜா ராணியை வெற்றி படமாக கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் கவனத்தையும் பெற்றார்.
இந்த படத்தில் ஜெய், ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தொடர்ந்து அட்லி நடிகர் விஜய் நடிப்பில் உருவான மூன்று வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து அசத்தினார். அந்த வகையில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களுமே அட்லியின் தரமான இயக்கத்தில் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. குறிப்பாக மெர்சல் படம் மிகப் பெரிய அளவில் விஜய்க்கு பெயரை வாங்கிக் கொடுத்தது.
தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குனர் அட்லிக்கு, அடுத்து பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பதான் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்து பாலிவுட்டை அசத்திய நடிகர் ஷாருக்கான், அடுத்ததாக தனது படத்தை இயக்க இயக்குனர் அட்லிக்கு அழைப்பு விடுத்தார்.
இதை அடுத்து நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் என்ற படத்தை அட்லீ இயக்கினார். இந்த படம் ரிலீசான முதல் நாளில் 23 படங்களின் காப்பி என விமர்சிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி 1150 கோடி ரூபாய் என்ற அளவுக்கு வசூலை குவித்தது. இந்த படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் அட்லி அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே படம் வசூலித்தால் தனக்கு சம்பளம் என்றும், 500 கோடிக்கு மேல் படம் வசூலித்தால் தனக்கு ஷேர் பிராப்பர்ட்டி தரவேண்டும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் அட்லீ ஒப்பந்தம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபமாக அட்லி இதுவரை தன்னுடன் பயணித்த, பழகிய தனது பழைய நண்பர்கள் அனைவரையும் விட்டு விலகி வந்துள்ளார் என்ற தகவல் வந்துள்ளது இதற்கு காரணம், தான் மிகப்பெரிய டைரக்டராகி உச்சத்தில் உள்ள நிலையில் தன்னுடன் பழகிய பழைய நண்பர்கள் வந்தால், தன்னை அட்லி என பெயர் சொல்லி அழைப்பதும், பலரது முன்னிலையில் தன்னிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வதும் தன்னுடைய இமேஜை பாதிக்கும் என்பதால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.





