- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி - தயாரிப்பு நிறுவனம் எடுத்த...

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி – தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு – அப்செட்டில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்த நாளில் ரிலீஸ் ஆகவில்லை. கோர்ட் வழக்கு என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்ய முயற்சிகள் செய்த போதும் சாதகமாக எதுவுமே நடக்காத நிலையில் அந்த வழக்கை தயாரிப்பு நிறுவனம் ஒரு கட்டத்தில் வாபஸ் வாங்கி விட்டது.

இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் இருந்ததால் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பிறகு ஒருவழியாக மும்பையில் ஜனநாயகன் படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்து விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை படத்துக்கு சென்சார் தரப்பில் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

- Advertisement -

இதுவரை 4 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் தராமல் சென்சார் போர்டு இழுத்தடித்து வருகிறது. மேலும் வருகிற 4ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் ஜனநாயகன் படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் இப்போது அதற்கும் வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியான நிலையில் பெரும்பாலான செய்தி நிறுவனங்கள், மீண்டும் திமுக தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளன. இன்னும் சில நிறுவனங்கள் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளன. இந்தியா டுடே மட்டுமே 120 தொகுதிகளில் ஜெயித்து தவெக ஆட்சியமைக்கும் என்று கூறியிருக்கிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஜனநாயகன் படம் ரிலீஸானால் அது படத்துக்கு போதிய வரவேற்பை வசூலை பெற்றுத் தராது என்கிற முடிவுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் வந்துள்ளது. எனவே புதிய ஆட்சி அமைந்த பிறகு ஒரு மாதம் கழித்து ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யலாம். அதனால் வருகிற ஜூன் மாதம் தான் ஜனநாயகன் படத்தை வெளியிட வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறது.

மேலும் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம், கேஜிஎஃப் நாயகன் யஷ் நடித்த டாக்ஸிக் என்ற படத்தையும் பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. அந்த படம் வருகிற ஜூன் 4ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்த நிலையில் இப்போது அந்த ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதனால் அதே ஜூன் 4ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட கேவிஎன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்