- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமையுமா பிளாக்? இரண்டே நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக...

நடிகர் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமையுமா பிளாக்? இரண்டே நாட்களில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு – ரூ. 2 கோடியை நெருங்கிய வசூல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் இளைய மகன். அவரது மூத்த மகன் ஜித்தன் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஜீவா அளவுக்கு ஜித்தன் ரமேஷ் முன்னணி நடிகராக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால் ஜீவா பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக அவர் நடித்த சிவா மனசுல சக்தி படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தது. இந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்க படத்தின் இயக்குனர் எம். ராஜேஷ் தயாராகி வருகிறார். ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா உள்ளி்ட்டோர் நடித்த பிரதர் படத்தை எம் ராஜேஷ் இயக்கி உள்ளார். தொடர்ந்து சிவா மனசுல சக்தி 2ம் பாகம் படத்தை எம் ராஜேஷ் இயக்க, ஜீவா நடிக்கிறார்.

- Advertisement -

நடிகர் ஜீவாவுக்கு ரௌத்திரம், சிங்கம் புலி, தெனெவெட்டு. முரண், டிஸ்யூம், ந;ண்பன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி படங்களாக இருந்தன. ஆனால் சமீப காலமாக ஜீவா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை,வரவேற்பை பெறவில்லை.

இந்லையில் தற்போது நடிகர் ஜீவா நடித்த பிளாக் படம் நேற்று முன்தினம் வெளியானது. வழக்கமாக தமிழ் சினிமாவில் திகில், திரில் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. பிளாக் படமும் ஒரு நாள் இரவில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை கொண்ட திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் ஜீவா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை பவானி சங்கரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

கோஹரன்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமகே் படம்தான் பிளாக். இந்த படத்தில் பல காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, யோகி, சாரா ஷியாம் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். கேஜி பாலசுப்ரமணி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

பிரியா பவானி ஷங்கருக்கு டிமான்டி காலனி 2 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இந்த படமும் பிரியா பவானி சங்கருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே பிளாக் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் 65 ரூபாய், 2ம் நாளில் ர கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வெளியான 2 நாட்களில் 2 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் நெருங்கியுள்ளதால் பிளாக் படத்திற்கு இன்னும் வசூல் அதிகரிக்கும், தியேட்டர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்