தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது இயக்கத்தில் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான மதகஜ ராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 12 ஆண்டுகள் கழித்து வெளியான இந்த படம் நடிகர் விஷாலுக்கு நல்ல கம்பேக் கொடுத்தது.
இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் இந்த ஆண்டில் வெளியான அரண்மனை 4 படமும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இப்போது விஷால் நடிக்கும் மற்றொரு படத்தை இயக்க இயக்குனர் சுந்தர் சி தயாராகி விட்டார். இதற்கிடையே ரஜினி நடிக்கும் ஒரு படத்தை இயக்க கமிட் ஆன சுந்தர் சி திடீரென அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்தார். அதில் நடிகர் ஆர் கே பாலாஜியும் ஜர்னலிஸ்ட் கேரக்டரில் நடித்திருந்தார் இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இதையடுத்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை தயாரிக்க வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் முன் வந்தது.
மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா ரெஜினா கசாண்ட்ரா சினேகா இனியா ஊர்வசி அபிநயா மைனா நந்தினி மற்றும் நடிகர்கள் யோகி பாபு துனியா விஜய் ராமச்சந்திர ராஜூ அஜய் கோஸ் சிங்கம்புலி விச்சு விஸ்வநாதன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக படத்தின் இயக்குனர் சுந்தர் சி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பூஜை 1 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டு படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகிறது என்று ஏற்கனவே தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிந்திருந்தார்.
இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து படக்குழு தரப்பில் இருந்து வீடியோ வெளியாகி உள்ளது. இந்த படம் வருகிற கோடைகாலத்தில் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக உள்ளது. சுமார் 2000 கலைஞர்கள், 6 மாதங்களில் அயராமல் உழைத்து இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக இயக்குனர் சுந்தர் சி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் குஷ்பு நயன்தாரா சினேகா ஊர்வசி உள்ளிட்டோர் இணைந்து கேக் வெட்டி உள்ளனர்.





