- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணா படம் எப்படி இருக்கு? வெளிப்படையாக தனது விமர்சனத்தை சொன்ன பாகுபலி இயக்குனர் ராஜமௌலி!

இராமாயணா படம் எப்படி இருக்கு? வெளிப்படையாக தனது விமர்சனத்தை சொன்ன பாகுபலி இயக்குனர் ராஜமௌலி!

- Advertisement -

இன்று வெளியான இராமாயணா படம் குறித்து பாகுபலி இயக்குனர் ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இராமாயணா இந்த படத்தின் பிரம்மாண்டமான அழகும் பெரிய திரையில் விரியும் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் கண்கவர் அனுபவமாக உள்ளன. ராமராக ரன்பீர் குறிப்பாக வனவாசம் தொடங்கும் கட்டத்தில் இருந்து அமைதியாகவும் அதேசமயம் கம்பீரமாகவும் இருக்கிறார். இராவணனாக யஷ் மிரட்டலான தோற்றத்தை வெளிப்படுத்த சாய் பல்லவி சீதையாக மிகுந்த நேர்த்தியுடன் நடித்திருக்கிறார். படத்தின் இறுதி கட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் பகுதி என அனைத்தும் மிகவும் பிடித்து போனது. இயக்குனர் நிதேஷ் திவாரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இவ்வளவு பிரமாண்டமான ஒரு கனவு திட்டத்தை மிக அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று அந்த பதிவில் ராஜமௌலி பாராட்டியிருக்கிறார்.

சற்று முன்