- Advertisement -
Homeபொழுதுபோக்குகொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்… வரும் 19ம் தேதி அல்லது 20ம் தேதி திரைக்கு வரும் ஜனநாயகன்...

கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்… வரும் 19ம் தேதி அல்லது 20ம் தேதி திரைக்கு வரும் ஜனநாயகன் – சென்சார் தரப்பில் கிடைத்த கிரீன் சிக்னல்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ஆனால் சென்சார் போர்டில் ஏற்பட்ட பிரச்னையால் அந்த படம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவில்லை. இது தளபதி ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் பலத்த ஏமாற்றத்தை தந்தது. ஏனெனில் இது தனது கடைசி படம் என விஜய் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் சென்சார் போர்டு தாமதம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. அதனால் நீதிபதிகள் அமர்வு கூறியபடி இந்த வழக்கை தனி நீதிபதி விசாரிக்க வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் ஜனநாயகன் படத்தை தணிக்கை செய்ய மறுஆய்வு குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. அதனால் விரைவில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட ராணுவ சிம்பல் தான் பிரச்னை எனில் அதை காண ராணுவ அதிகாரி ஒருவரும் இந்த படத்தை மறு ஆய்வு குழுவில் இணைந்து பார்க்க உள்ளார்.

அவர் ஒருவேளை ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுமையாக நீக்கிக் கொள்ளவும் படக்குழு தயாராக உள்ளது. மேலும் ஏற்கனவே தணிக்கை குழு பார்த்த படத்தின் வெர்சனை தான் மீண்டும் மறு ஆய்வுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியுள்ளது. 20 நிமிட காட்சிகளை நீக்கிய புதிய வெர்சனை அனுப்பியதாக பரவும் தகவல் தவறானது. அது வதந்தி என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே தணிக்கைக்கு அனுப்பிய படத்தை மட்டுமே மறு ஆய்வுக்குழுவுக்கும் அனுப்ப வேண்டும். வேறு வெர்ஷனை மாற்றி அனுப்புவது விதிமீறலாகும். ஏற்கனவே சென்சார் போர்டு கமிட்டி ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டதால் அதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விடும். மேலும் 20 நாட்களுக்குள் மறு ஆய்வுக்குழுவும் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இதன் காரணமாக மிக விரைவில் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் தரப்பட்டு விடும். அதனால் வரும் 19 அல்லது 20ம் தேதி ஜனநாயகன் படம் திரைக்கு வரும் என்கிற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. அதனால் திரைக்கு அந்த நாளில் வர திட்டமிட்டிருந்த தாய் கிழவி உள்ளிட்ட சில படங்கள் இன்னும் சில வாரங்களுக்கு தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்