- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 24ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ், பலத்த ஏமாற்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் - விஜய்க்கு...

வரும் 24ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ், பலத்த ஏமாற்றத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் – விஜய்க்கு பதிலாக ஸ்பைடர் மேன் உதவுவாரா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். வரும் 24ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. 6 மாதங்களாக சென்சார் பிரச்சனை காரணமாக கிடப்பில் போடப்பட்ட ஜனநாயகன் படம் ஒரு வழியாக தியேட்டருக்கு வரப்போவது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இந்த படம் ரிலீஸ் ஆவது குறித்து தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்தவித சந்தோஷமும் இல்லை.

அதைவிட வருத்தமான ஒரு மனநிலையில் தான் அவர்கள் காணப்படுகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஜனநாயகன் படம் ஏ சான்றிதழ் பெற்றதுதான். புதிய படங்கள் ரிலீஸானால் 7 நாட்களுக்கு தொடர்ந்து 5 காட்சிகள் திரையிட்டு கொள்ளலாம் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டார். அதனால் 7 நாட்களுக்கு தொடர்ந்து 5 காட்சிகளை நடத்திக் கொள்வதில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை.

- Advertisement -

ஆனால் அதே நேரத்தில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் இந்த படத்துக்கு குழந்தைகளுடன் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை அவ்வளவாக இருக்காது. வழக்கமாக விஜய் படங்கள் என்றாலே ஃபேமிலி ஆடியன்ஸ் குழந்தைகள் பெண்கள் அதிக அளவில் வருவதுதான் வழக்கம். அதன் மூலம் பார்க்கிங் கட்டணமும் கேண்டீன் வியாபாரமும் அமோகமாக இருக்கும்.

அந்த வகையில் விஜய் படங்கள் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் உரிமையாளர்களுக்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு கணிசமான லாபம் கிடைக்கும். ஆனால் இந்த முறை அதற்கு சென்சார் போர்டு ஆப்பு வைத்து விட்டது. ஏனென்றால் ஜனநாயகன் ஏ படம் என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் கண்டிப்பாக 14 வயது உட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குழந்தைகள் இல்லாமல் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதும் வெகுவாக குறையும்.

- Advertisement -

அதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விஜய் நடித்த இந்த படம் ரிலீசானாலும் எதிர்பார்த்த அளவுக்கு வழக்கமான லாபம் கிடைக்காது. இந்த சூழ்நிலையில் வருகிற 31ம் தேதி ஸ்பைடர்மேன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இது அதிக அளவில் குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படம் ரிலீஸான ஒரு வாரத்தில் ஸ்பைடர் படம் ரிலீசானால் அந்த படம் மூலம் ஒரு கணிசமான லாபம் கிடைக்கும். குழந்தைகளுடன் பேமிலி ஆடியன்ஸ் இந்த படம் பார்க்க அதிகமாக வருவார்கள் என்பதால் பார்க்கிங் மற்றும் கேண்டின் வியாபாரமும் அமோகமாக இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சற்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போலவே கல்லா கட்டலாம் என்கிற ஒரு ஆர்வத்திலும் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்