- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் வேற லெவல் ஆக்‌டிங், லோகேஷ் தட்டி தூக்கீட்டாரு, குடும்பத்தை காப்பாத்த ஒரு அப்பாவா விஜய்...

விஜய் வேற லெவல் ஆக்‌டிங், லோகேஷ் தட்டி தூக்கீட்டாரு, குடும்பத்தை காப்பாத்த ஒரு அப்பாவா விஜய் பிச்சி உதறீட்டாரு – லியோ பர்ஸ்ட் ஷோ பார்த்த கேரளா ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படம், இன்று காலை ரிலீஸ் ஆனது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு ரசிகர் சிறப்பு காட்சி திரையிட்ட நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சி திரையிடப்பட்டு, விஜய் ரசிகர்கள் படம் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

கேரளாவில் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் பலரும், லியோ படத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர். இது ஒரு குடும்பத்தை காப்பாற்ற போராடுகிற தந்தையை பற்றிய கதை. விஜய் இதுவரைக்கும் இப்படி ஒரு கேரக்டரில் நடித்தது இல்லை. அதுபோல், லோகேஷ் கனகராஜூம் தன் வழக்கமான ஜானரில் இருந்து மாறி, இந்த படத்தை தந்திருக்கிறார் என்கின்றனர்.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்துக்கு, இப்படி எடுத்தவுடனே பாசிட்டிவ் ரிவ்யூ கிடைத்திருப்பது படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவருக்கும், படக்குழுவினருக்கும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடையே 50 -50 என்ற வழக்கமான பர்சன்டேஜ் இல்லாமல், இந்தமுறை லியோ படத்துக்கு, விநியோகஸ்தர்கள் தரப்பில் 70 முதல் 75 பர்சன்டேஜ் வரை பங்கு கேட்பதால், தமிழகத்தில் சில தியேட்டர்களில் லியோ ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

டிரெய்லர் படம் பார்த்த ரசிகர்கள், கோயம்பேடு ரோகிணி தியேட்டரை துவம்சம் செய்த காரணத்தால், சில இடங்களில் லியோ படத்தை காலை 9 மணிக்கு திரையிடாமல் தாமதப்படுத்தினர். ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவும், ஓவராக அலப்பரையில் ஈடுபட்ட ரசிகர்களை கட்டுப்படுத்தவும் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு பின், லியோ படம் சில மணி நேரம் தாமதமாக திரையிடப்பட்டுள்ளது.

லியோ படத்தை பொருத்தவரை ரசிகர்கள் தெரிவித்த முதல்கட்ட விமர்சனத்திலேயே படம் வேற லெவலில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில், ரசிகர் ஷோ படம் பார்த்தவர்கள் பெரும்பாலும் விஜய் ரசிகர்கள் என்பதால் படம் குறித்து நடுத்தர ரசிகர்களின் விமர்சனம் சரியாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் இந்த கருத்து பொய்த்துப் போக அதிக வாய்ப்புள்ளது.

சற்று முன்