நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கில் மிக முக்கிய நடிகையாக வலம் வருகிறார். இவர் மிஷ்கினின் “முகமூடி” திரைப்படத்தின் மூலம்தான் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் முத்திரையை பதித்த நடிகையாக மாறிப்போனார். அவ்வப்போது தெலுங்கு திரைப்படங்களிலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

பூஜா ஹெக்டேவிற்கு தெலுங்கில் பல திரைப்படங்கள் ஹிட் ஆனது. மகேஷ் பாபு, ஜீனியர் என்டிஆர் போன்ற தெலுங்கின் டாப் நடிகர்களுடன் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். குறிப்பாக அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்த “அல வைகுண்ட புரமலு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இத்திரைப்படத்தால் அவரது மார்க்கெட் வேல்யூ கூடியது.
ஆனால் “அல வைகுண்ட புரமலு” திரைப்படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே நடித்த “ராதே ஷ்யாம்”, “பீஸ்ட்”, “ஆச்சார்யா” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. அதே போல் இவர் ஹிந்தியில் நடித்த “சர்க்கஸ்” திரைப்படமும் சரியாக போகவில்லை. இந்த நிலையில்தான் மீண்டும் ஹிந்தியில் சல்மான் கானுடன் இணைந்து “கிசி கா பாய் கிசி கி பைஜான்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் தமிழின் “வீரம்” திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஏற்கனவே பாலிவுட்டிற்கு நல்ல காலம் இல்லை. இந்த நிலையில் இத்திரைப்படமும் அட்டர் ஃப்ளாப் ஆனதால் பாலிவுட் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.
இவ்வாறு தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களில் நடித்து வந்ததால் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் தற்போது அதள பாதாளத்திற்கு போய் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.





