- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் படத்தில் அந்த விஷயத்தில் கோட்டை விட்ட யுவன் சங்கர் ராஜா, இந்த விஷயத்துல...

தி கோட் படத்தில் அந்த விஷயத்தில் கோட்டை விட்ட யுவன் சங்கர் ராஜா, இந்த விஷயத்துல பின்னி பெடலெடுத்துட்டாராம்.. – இது உருட்டா இல்ல… உண்மையான்னு தெரியலையே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸாகிறது. அதற்கு முன்பாக வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி தி கோட் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. இதுவரை இந்த படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்த 3 பாடல்களுமே ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

விஜய் நடித்த புதிய கீதை என்ற படத்துக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் படம், விஜய்க்கு 2வது முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வழக்கமாக வெங்கட்பிரபு படங்களுக்கு இசையமைப்பது யுவன் சங்கர் ராஜாதான் என்பது குறிப்பிடத்தக்கது. நா முத்துக்குமார் பாடல் வரிகளில், இவரது இசையில் பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகியிருக்கின்றன.

- Advertisement -

ஆனால் சமீபகாலமாக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பழைய துள்ளல், ஆர்வம், இசைக்கோர்வை இல்லை என அவரது ரசிகர்களே ஏமாற்றத்தை கூறி வருகின்றனர். பல படங்களில் இசைக்க ஒத்துக்கொண்டு மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தாமதிப்பதாகவும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தரப்பில் புகார்களும் உள்ளன.

இந்நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா அறிவிக்கப்பட்ட போதே, இவர் சரியான நேரத்தில் படத்துக்கு இசையமைத்து விடுவாரா, என பலரும் கேள்வி எழுப்பினர். தனது சித்தப்பா கங்கை அமரன் மகன், அண்ணன் வெங்கட்பிரபு என்பதால் நிச்சயமாக தாமதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் தி கோட் படத்தில் இடம்பெற்ற விசில்போடு பாடலும், சின்ன சின்ன கண்ணிலே பாடலும், சமீபத்தில் வெளியான நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைப்பை ஏற்படுத்தவில்லை. இப்படி 3 பாடல்களுமே ரசிகர்களுக்கு திருப்தி தராததால், பலத்த ஏமாற்றத்தில் வெங்கட்பிரபுவும் இருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் தி கோட் படத்தின் ரீ ரிக்கார்டிங் பணியை யுவன் சங்கர் ராஜா முடித்து விட்டார். பாடல்களில் கோட்டை விட்ட யுவன் சங்கர் ராஜா, ரீ ரீக்கார்டிங்கில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நிச்சயமாக படத்தின் ரீ ரிக்கார்டிங் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை, பாராட்டுகளை பெறும் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மைதானா, இல்லே உருட்டா என்பதை படம் வெளியான பிறகு ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

சற்று முன்