- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… மலேசியாவுக்கு குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் விஜய் மற்றும் பிரபலங்கள் -...

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா… மலேசியாவுக்கு குடும்பத்துடன் கிளம்பிய நடிகர் விஜய் மற்றும் பிரபலங்கள் – களை கட்டிய தளபதி விழா!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை 27ம் தேதி மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் எச் வினோத் மற்றும் கேவிஎன் புரடக்சன்ஸ் சார்ந்த தயாரிப்பு நிர்வாகிகள், நடிகர் விஜய் நடிகைகள் பூஜா ஹெக்டே மமீதா பைஜூ பாபி தியோல் நரேன் கௌதம் மேனன் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

சென்னையில் இருந்து ஜனநாயகன் படத்தில் பணிபுரிந்த 250 பேர் அவர்களது குடும்பத்துடன் மலேசியா செல்கின்றனர். இதற்கான விமான போக்குவரத்து செலவு மலேசியாவில் அவர்கள் தங்கும் ஓட்டல், உணவு வசதி என பல்வேறு வசதிகளும் முதல் தரத்தில் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி செலவுகளுக்காக மொத்தமாக ரூ.12 கோடி வரை பட்ஜெட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் மலேசியாவில் நாளை நடக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசும் நடிகர் விஜய் அரசியல் சார்ந்த கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என்று கோலாலம்பூர் போலீசார் ஏற்கனவே தடை விதித்துள்ளனர். டிவிகே கட்சி கொடி போஸ்டர்கள் பேனர்கள் டிவிகே கட்சி சின்னம் பொறித்த தொப்பி பெல்ட் கடிகாரம் பனியன்கள் போன்றவற்றை நிகழ்ச்சி திடலுக்குள் அணிந்து வரவும் கோலாலம்பூர் போலீசார் தடை விதித்துள்ளனர்.

மேலும் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம் கொண்ட பொருட்களை விழாப் பகுதியில் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர். ஏனென்றால் டிவிகே கட்சி கொடியில் பிரதானமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் மொத்தம் 85 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் மிகப் பிரமாண்டமான ஒரு பெரிய அரங்கில் இசையீட்டு விழா நடைபெற உள்ளது.

- Advertisement -

மொத்தம் ஐந்து மணி நேரம் இந்த விழா நடக்கும் என்றும் அதில் 3 மணி நேரம் விஜய் நடித்த படங்களின் இசை கச்சேரி நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து 2 மணி நேரம் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் இன்று காலை தனது அம்மா ஷோபா சுந்தர்சேகர் மற்றும் தனது குடும்பம் சார்ந்த முக்கிய உறவினர்களுடன் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அதேபோல் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள இயக்குனர்கள் அட்லி நெல்சன் திலீப் குமார் போன்றவர்களும் மலேசியா செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய்க்கு ஜனநாயகன் கடைசி என்று ஏற்கனவே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி 9ம் தேதி பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்