நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் தனுஷூம் அரசியலுக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. மிக விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் வெளியிட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நடிகர் தனுஷின் புதிதாக துவங்க உள்ள கட்சியின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எந்த பின்னணியும் இல்லாமல் நடிகர் என்ற ஒரே அடையாளத்துடன் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி துவங்கிய அவர், 2 ஆண்டுகள் 3 மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்தார்.
எந்த கூட்டணி கட்சிகளின் ஆதரவும் இல்லாமல் தனித்து தேர்தலை சந்தித்த தவெக தலைவர் விஜய் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகி தவெக ஆட்சியை அமைத்தார். இப்போது 3 மாதங்களை கடந்து அவரது ஆட்சி நடந்து வருகிறது. இந்த சூழலில் நடிகர் தனுஷூக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது.
சமீபத்தில் அவரது ரசிகர்மன்ற கொடி வைரலான நிலையில் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும் தங்களது வாகனங்களில் அந்த கொடிகளுடன் தான் வலம் வருகின்றனர். மேலும் தனது பிறந்த நாள் விழாவிலும் நடிகர் தனுஷ் பேசிய விதமும் அவரது உடல் மொழியும் அரசியல்வாதிக்கான லட்சணங்களுடன்தான் இருந்தது.
சமீபத்தில் மத்திய அரசின் தரப்பில் 72வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகராகவும் அவர் நடித்த 2 படங்களுக்கும் என 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அவர் அரசியலுக்கு வருவதற்கான அடையாளங்கள் உருவான நிலையில் மத்திய அரசின் தேசிய விருதுகள் அவர் அறிவிக்கப்பட்டதற்கு காரணமே பாஜக அரசியல் பின்புலம்தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் தனுஷ், அவரது புதிய அரசியல் கட்சியை பதிவு செய்திருப்பதாகவும் அவரது கட்சியின் பெயர் தமிழக எழுச்சிக் கழகம் ( தஎக) என்றும் தெரிய வந்துள்ளது. விஜய் தவெக என்றால் தனுஷ் தஎக என்று ஆரம்பித்திருக்கிறார். இதில் கூட விஜயை காப்பியடிக்கணுமா என்று தளபதி ரசிகர்களும் தவெக தொண்டர்களும் கடுப்பில் உள்ளனர்.





