தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். வருகிற 18ம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படத்துக்கு அரசன் என வெற்றிமாறன் டைட்டில் வைத்திருக்கிறார். தனுஷ் நடித்த படத்துக்கு அசுரன் என டைட்டில் வைத்த அவர் சிம்பு படத்துக்கு அரசன் என பெயர் வைத்து கபடி விளையாடி இருக்கிறார்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் மன்னன் நாடோடி மன்னன் மன்னாதி மன்னன் மாமன்னன் மகாராஜா ராஜா மதகஜ ராஜா ராஜாதி ராஜா ராஜா தேசிங்கு என பல டைட்டில்கள் வந்த நிலையில் அரசன் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார். அரசன் என்ற பெயரிலேயே ஒரு கம்பீரம் இருப்பதால் எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் அரசன் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒருவர் தாடி கெட்டப்புடனும் மற்றொருவர் கிளீன் சேவ் செய்யப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற இளமையான கெட்டப்பிலும் நடிக்க உள்ளார். இப்போது தாடி மீசையுடன் இருக்கும் கெட்டப்பில்தான் முதல் ஷெட்யூலில் சிம்பு நடிக்க உள்ளார்.
அதன்பிறகு அரசன் படப்பிடிப்புக்கு இடைவெளி விடும் நடிகர் சிம்பு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏற்கனவே கமிட் ஆன படத்தில் நடிக்கச் சென்று விடுகிறார். அந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் அரசன் படப்பிடிப்பில் கிளீன் சேவ் செய்த இளைஞர் கெட்டப்பில் சிம்பு நடிக்க உள்ளார். அந்த கேரக்டரில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது நடிகை சமந்தா தான் என்று தெரிய வந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில் முதல் ஷெட்யூலில் அவர் தாடி மீசையுடன் நடிக்கும் நிலையில் பெரும்பாலும் ஆக்சன் பிளாக் அதாவது சண்டை காட்சிகளே படமாக்கப்பட உள்ளன. அதனால் அந்த கெட்டப்பில் அவர் போராளியாக வர அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் வெற்றிமாறன் படம் என்றாலே அதில் சமூக கொடுமைகளை எதிர்க்கும் அல்லது பாதிக்கப்படும் நபராக ஹீரோ இருப்பது வழக்கம்.
அதன்பிறகு கிளீன் சேவ் செய்த கெட்டப்பில் இளமையாக வரும் சிம்புவுடன் சமந்தா நடிப்பதால் அதில் காதல் காட்சிகள் அதிகளவில் படம்பிடிக்க வாய்ப்புள்ளது. அதனால் சிம்பு இரட்டை வேடங்களில் ஒருவர் சமூக போராளியாகவும் ஒருவர் காதல் மன்னனாகவும் இந்த படத்தில் வருவது உறுதியாகி விட்டது. இந்த லேட்டஸ்ட் தகவல்களால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





