- Advertisement -
Homeபொழுதுபோக்குசென்சார் போர்டு காட்டிய கெடுபிடியால் வடக்கன் படத்தின் பெயர் மாற்றம், அட இந்த பேரா வெச்சிருக்காங்க?...

சென்சார் போர்டு காட்டிய கெடுபிடியால் வடக்கன் படத்தின் பெயர் மாற்றம், அட இந்த பேரா வெச்சிருக்காங்க? – அப்போ படம் சென்டிமென்டா சூப்பர் ஹிட் தான்!

- Advertisement -

கடந்த 5 ஆண்டுகளாக, தமிழ்நாட்டுக்கு வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம், திருச்சி என தமிழ்நாட்டின் பல முக்கிய தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் பலமடங்கு அதிகரித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தொடர்ந்து வடமாநிலங்களில் இருந்து தொழிலுக்காக, தமிழ்நாட்டுக்கு படையெடுத்தபடி உள்ளனர். ஒவ்வொரு முறையில், பல நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்குள் வருகின்றனர். ஓட்டல்களில் சமையல், சப்ளையர், கிளீனிங், கட்டடத் தொழில், ரோடு கட்டுமான பணி, பனியன் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உடல் உழைப்பு கூலித் தொழிலாளர்களாக பணி செய்கின்றனர்.

- Advertisement -

தங்களுக்கு வரும் கணிசமான வருமானத்தின் பெரும்பகுதியை, தனது சொந்த ஊரில் உள்ள பெற்றோர், உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு இங்கு வாடகை மிக குறைந்த தீப்பெட்டி அளவு அறைகளில் நான்கைந்து பேராக தங்கிக் கொள்கின்றனர். சமையல் செலவையும் பங்கிட்டு கொள்கின்றனர். ஆனால் பெரிய அளவில் சம்பாதிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, மனைவி பிள்ளைகள் என குடும்பம் குடும்பமாக, தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நிரந்தரமாக செட்டில் ஆகியும் வருகின்றனர். இப்படி நாளுக்கு நாள் தமிழ் நாட்டில் பெருகிவரும் வடமாநில தொழிலாளர்களால், தமிழ்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு குறைந்து வருமான இழப்பு ஏற்படுகிறது. உதாரணமாக, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் 70 சதவீதத்துக்கு மேல் வடமாநிலத் தொழிலாளர்கள்தான் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில், இந்த விஷயத்தை மையப்படுத்தி, வடமாநிலத்தவர்களை பலரும் வடக்கன் என அழைப்பதால், வடக்கன் என்ற பெயரிலேயே திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர் சக்தி, ஒரு படத்தை இயக்கியுள்ளார். எம்டன் மகன், வெண்ணிலா கபடிக்குழு போன்ற பல படங்களில் வசனகர்த்தாவாக பாஸ்கர் சக்தி பணிசெய்தவர். அந்த படங்களில் சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில், சென்சார் போர்டு வடக்கன் என்ற பெயரில் பிரிவினை வாதம் மைய கருத்தாக உள்ளது. தெற்கு வடக்கு என்ற பிரிவினை பேதம் கூடாது என்று படத்தின் பெயரை மாற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த படத்தின் பெயர் ரயில் என மாற்றப்பட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டுக்குள் வருவது ரயிலில்தான் என்பதால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில் என்ற பெயர் வைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் என்பது சென்டிமென்ட் உண்மையாக உள்ளது. ரயில் என பெயர் மாற்றப்பட்ட வடக்கன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

- Advertisement -

சற்று முன்