- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க ஆதார் கார்டை எடுங்க, இப்பவே செக் பண்ணிடலாம்… பிரபல இயக்குனரை வம்பில் சிக்க வைத்த...

உங்க ஆதார் கார்டை எடுங்க, இப்பவே செக் பண்ணிடலாம்… பிரபல இயக்குனரை வம்பில் சிக்க வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் இப்போது தனது 25வது படம் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் ஸ்ரீலீலா அதர்வா குரு சோமசுந்தரம் மலையாள நடிகர் பசில் ஜோசப் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது.

இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த மதராஸி படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற கன்னட நடிகை நடித்திருக்கிறார். விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால், சிவகார்த்திகேயனுக்கும் வில்லனாக நடித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பல வெற்றிப் படங்களில் மிக முக்கியமானது டாக்டர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் யோகிபாபு வினய்குமார் ஆர்ஜே அர்ச்சனா இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மிலிட்டரி டாக்டர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிப்பு பேசப்பட்டது.

டாக்டர் படத்தில் அபார வெற்றிக்கு பிறகுதால் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கினார். டாக்டர் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்புக்கு பின்புதான் நடிகர் ரஜினிகாந்த், தனது ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சனுக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகர் சிவகார்த்திகேயனும், இயக்குனர் நெல்சனும் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குனர் நெல்சன், எனக்கும் சிவாவுக்கும் ஒரே வயசுதான். ஒரு மாதம்தான் வயதில் வித்யாசம். ஆனால் அண்ணே அண்ணே என்று கூப்பிட்டு அவர் என்னை அண்ணனாக ரிஜிஸ்டர் பண்ணிவிட்டார் என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், அண்ணே அண்ணே உங்களுக்கும் எனக்கும் ஒரு மாசம் வித்யாசம் கிடையாது. ஒன்றரை வயது வித்யாசம் இருக்கு என்றார். அதற்கு எங்கே ஒன்றரை வயது வித்யாசம்? 2 பேருமே ஒண்ணாத்தானே எல்கேஜி போனோம்? என்று நெல்சன் கேட்க, எங்கே உங்க ஆதார் கார்டை டஎடுங்க என்னோட ஆதார் கார்டையும் எடுக்கறேன், செக் பண்ணிடுவோம் என்று சிவகார்த்திகேயன் கூற, இயக்குனர் நெல்சன் உடனே அமைதியாகி விட்டார். அங்கிருந்த பலரும் இதைப் பார்த்து கைகொட்டி சிரித்தனர்.

- Advertisement -

சற்று முன்