- Advertisement -
Homeபொழுதுபோக்குபைசன் காளமாடன் படத்துக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் - வெளியான...

பைசன் காளமாடன் படத்துக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படம் – வெளியான லேட்டஸ்ட் தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில படங்களில் துணை நடிகராக நடித்தவர் விக்ரம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பல நடிகர்களுக்கு பின்னணி குரல் பேசியவர். இயக்குனர் பாலா இயக்கிய சேது படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கு சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைத்தது, அதன்பிறகு பல வெற்றிப் படங்களில் நடித்த விக்ரம் முன்னணி நடிகராக மாறினார்.

நடிகர் விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்க வந்து விட்டார். அவர் நடித்த முதல் படம் ஆதித்ய வர்மா பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற நிலையில் அவர் நடித்த மஹான் படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இந்த படத்தில் விக்ரமும் நடித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து நீலம் புரடக்சன்ஸ் சார்பில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த படம் பைசன் காளமாடன். கடந்த ஆண்டில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலும் குவித்தது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பசுபதி இயக்குனர் அமீர் லால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பிறகு நடிகர் துருவ் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பலரிடம் கதை கேட்ட துருவ் விக்ரம் அந்த கதைகளை எல்லாம் நிராகரித்தார். இதற்கிடையே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கூட துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனதாக தகவல் வெளியானது. ஆனால் அதுவும் உறுதி செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இப்போது நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் துருவ் விக்ரம் கமிட் ஆகியுள்ளார். தெலுங்கு புதுமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.

நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என 2 மொழிகளில் உருவாகிறது. இரண்டே வாரங்களில் இந்த படத்தில் நடிப்பது குறித்து துருவ் விக்ரம் ஓகே சொல்லி இருக்கிறார். மேலும் புதுமுக இயக்குனர் படத்தில் துருவ் விக்ரம் நடிக்க காரணம், படத்தின் கண்டென்ட் வேற லெவலில் இருப்பதும் இந்த படத்தை தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதும்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்