- Advertisement -
Homeபொழுதுபோக்குமிஷ்கினுடன் புயல் வேகத்தில் பயணிக்கும் விஜய் சேதுபதி... படத்திற்காக இயக்குனர் செய்த தரமான சம்பவம்...

மிஷ்கினுடன் புயல் வேகத்தில் பயணிக்கும் விஜய் சேதுபதி… படத்திற்காக இயக்குனர் செய்த தரமான சம்பவம்…

- Advertisement -

Oதமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் இருந்தாலும் அவர்களின் ஒரு சிலருக்கே ரசிகர் பட்டாளம் உள்ளது. மணிரத்னம், ஷங்கர், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் என நீளும் இந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு என தனி வரவேற்பு இங்கு இருக்கத்தான் செய்கிறது.

இதனை தனது இரண்டாவது திரைப்படமான அஞ்சாதே படத்தில், மிஷ்கின் காட்டி இருப்பார். இரு நண்பர்களுக்குள் ஏற்படும் மனஸ்தாபம் அதனால் ஏற்படும் விளைவு மற்றும் ஆள் கடத்தல் போன்றவற்றை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையில் மெருகூட்டி அசத்திருப்பார் மிஷ்கின். தமிழ் சினிமா தாண்டி வந்த திரைப்படங்களின், அஞ்சாதே மிக முக்கியமான திரைப்படம் என்று கூறலாம்.

- Advertisement -

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் கிராப் வான அளவுக்கு உயர்ந்தது. அவர் எடுத்த ஒவ்வொரு திரைப்படங்களும், ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகின. இடையிடையே சில தோல்வி திரைப்படங்களையும் அவர் கொடுத்தார். அதில் நந்தலாலா திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூலை குவிக்க தவறியது.

- Advertisement -

 

இதேபோல், மிகப் பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட முகமூடி திரைப்படம், மிஷ்கினுக்கு பெருத்த அடியை கொடுத்தது. ஆனால் இதனை சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இயக்குனர், தனது பழைய பாணிக்கே திரும்பி யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்து சபாஷ் போட வைத்தார். தொடர்ந்து, அவர் இயக்கிய பிசாசு திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

 

இந்த நிலையில், அவர் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போஸ்ட் ப்ரடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் என்னும் படத்தை மிஸ்கின் எடுத்து வருகிறார்.

 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ட்ரெயின் என தலைப்பிட்டு இருப்பதால், இது ரயிலை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என தெளிவாக தெரிகிறது. இந்த திரைப்படத்திற்காக, இசையமைப்பாளராக மிஷ்கின் மாறி இருக்கிறார். இசை பின்னணி இசை என இரண்டையும் சேர்த்து அவர் கவனித்து வருகிறார். அதுபோக, படத்தில் இருந்து ஒரு பாடலையும் அவர் பாடி இருக்கிறாராம். இயக்கத்துடன் சேர்த்து இசையிலும் மிஷ்கின் பயணித்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்