- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக போகுது கோட் படத்தின் அடுத்த அப்டேட்... இந்த முறை விஜய்...

ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாக போகுது கோட் படத்தின் அடுத்த அப்டேட்… இந்த முறை விஜய் விசிறிகளுக்கு காத்திருக்கும் மாபெரும் ஆச்சரியம்…

- Advertisement -

அரசியல் களத்தில் குதித்திருக்கும் விஜய் தற்போது தனது திரையுலகில் இறுதி பயணத்தில் இருக்கிறார். தனது 69ஆவது திரைப்படத்திற்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் முழுநேர அரசியலில் ஈடுபட போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தளபதி விஜயின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகப்படுத்தி இருக்கிறது.

 

- Advertisement -

தற்போது விஜய் தனது 68வது திரைப்படமான கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதுபோக ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்திற்குள் இருக்கிறது.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் இரண்டு விஜய்யும் பைக்கில் அதி வேகமாக செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

 

அதேசமயம் இது டைம் ட்ராவல் கதை என்பதால் எதிர்காலத்தில் இருக்கும் விஜயும் தற்போது இருக்கும் விஜயும் சேர்வது போல காட்சி அமைத்திருக்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சஸ்பென்ஸ்களை விஜய் இந்த திரைப்படத்தில் வைத்திருக்கிறார்.

 

குறிப்பாக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயை மிக இளமையான தோற்றத்தில் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. இது போக படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆகி இருக்கிறார் திரிஷா. இது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கும் நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்தையும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.

 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்தன. இந்த நிலையில் தற்போது மூன்றாவது பாடல் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

 

- Advertisement -

சற்று முன்