- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் கொஞ்சம் இறங்கி வருவாரா? 2026ம் ஆண்டில் ஏகே 64 படம்...

அந்த விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் கொஞ்சம் இறங்கி வருவாரா? 2026ம் ஆண்டில் ஏகே 64 படம் திரைக்கு வருமா? – ஏகே ரசிகர்களுக்கு நீடிக்கும் குழப்பம்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி மற்றும் குட்பேக் அக்லி என 2 படங்கள் இந்த 2025ம் ஆண்டில் வெளியானது. இந்த 2 படங்களுமே வசூலில் ஓரளவு திருப்தி அளித்தாலும் குட்பேட் அக்லி படம் தான் அதிகமான லாபம் தந்தது. ஆனால் இந்த ஆண்டு முழுவதும் நடிகர் அஜபத்குமார் படப்பிடிப்பு எதிலும் கலந்து கொள்ளாமல் முழுக்க முழுக்க கார் ரேஸிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி விட்டார்.

இந்த 2025ம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை அவர் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு கார் ரேஸ்களில் கலந்து கொண்டார். அடுத்ததாக குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜீத்குமாரின் அடுத்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்துக்கு ஏகே 64 என தற்காலிக பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதுதான் இன்னும் தெரியவில்லை.

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வருகிற 2026 பிப்ரவரி மாதத்ததில் ஏகே 64 படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்கிறார். ஆனால் இன்னமும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கு காரணம் இன்னும் இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது முடிவாகவில்லை. நடிகர் விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டார். ஜனநாயகன் என்னுடைய கடைசி படம் என்றும் விஜய் அறிவித்துவிட்டார்.

அதனால் நடிகர் அஜீத்குமாருக்கு இனி சினிமாவில் போட்டியில்லை. அது மட்டும் இன்றி நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படங்களுக்கு இப்போது பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆர்வம் இல்லை. ஒருதரப்பு ரசிகர்கள் மட்டுமே அஜீத்குமார் படங்களை விரும்புகின்றனர். அதனால் அவரை வைத்து 300 கோடி ரூபாய் என்கிற அளவுக்கு பெரிய பட்ஜெட் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன் வர மறுக்கிறார்கள்.

- Advertisement -

அதனால் அவரது அடுத்த படத்தை துவங்குவதில் பெரிய சிக்கல் நீடிக்கிறது. அத்துடன் நடிகர் அஜீத்குமார் ஒரு படத்தில் நடிக்க 185 கோடி ரூபாய் வரை சம்பளமாக கேட்கிறார். அவ்வளவு பெரிய சம்பளத்தை கொடுத்து அஜீத்குமாரை வைத்து படம் எடுத்தால் போட்ட முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது என்பதே தயாரிப்பாளர்களின் தயக்கமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் அஜீத்குமாரின் 64வது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டாலும் 2026 ஆண்டு இறுதிக்குள் அந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

ஏனென்றால் பிப்ரவரியில் படத்தை தொடங்கி அந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட வாய்ப்பு குறைவு. அவரது அடுத்த படமும் 2026ம் ஆண்டில் தொடங்கப்பட்டு விடும். சிறுத்தை சிவா உள்ளிட்ட பலர் அடுத்த படத்தை இயக்க போட்டியிடுகிறார்கள். அஜீத்குமாரின் சம்பள பிரச்சனை பெரிய சிக்கலாக உள்ளது. அவர் சம்பளத்தை குறைத்தால் படப்பிடிப்பை துவங்க வசதியாக இருக்கும். அவர் ரூ.185 கோடி சம்பளத்தை விட்டு இறங்க மறுப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்