- Advertisement -
Homeபொழுதுபோக்கு40வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஸ்ருதிஹாசன்… இப்படி ஒரு போட்டோவை வெளியிடலாமா? - இணையத்தில்...

40வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகை ஸ்ருதிஹாசன்… இப்படி ஒரு போட்டோவை வெளியிடலாமா? – இணையத்தில் வெடித்த சர்ச்சை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். இப்போது மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் ராஜ்யசபா எம்பி ஆகவும் அவர் இருந்து வருகிறார். அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 படத்தை நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் சரிகா தம்பதியின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன். பாடகியும் நடிகையுமாக ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது பாடகியாகவும் அவர் சில படங்களுக்கு பின்னணி பாடி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

- Advertisement -

அவரது பிறந்த நாளையொட்டி முன்னிட்டு ஸ்ருதிஹாசன் இப்போது நடித்து வரும் சில படங்களிலிருந்து ஸ்பெஷல் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில் தெலுங்கு படம் ஆகாசம்லோ ஒகதாரா என்ற படத்தில் இருந்து வெளியான ஒரு போஸ்டர் இப்போது இணையத்தில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த புகைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சிகரெட் பிடித்து புகை வெளியே கசியும்படி ஸ்டைலாக தெரிகிறார். இயக்குனர் பவன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சாத்வீகா தான். நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த படத்தில் அவர் வில்லி கேரக்டரில் நடிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதனால் இப்படி ஒரு சிகரெட் புகைப்பது போன்ற அவரது போஸ்டரை படக்குழு தரப்பில் வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. தெலுங்கில் உருவாகி வரும் ஆகாசம்லோ ஒக தாரா படம் மலையாளம் தமிழ் இந்தி மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளில் இப்படி ஒரு புகை பிடிக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி தனது புகைப்படத்தை ரிலீஸ் செய்ய நடிகை ஸ்ருதிஹாசன் ஓகே சொன்னாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு சில கெட்ட பழக்கங்கள் இருந்ததாகவும் பிறகு அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறியிருந்தார். ஆனால் இப்படி புகை பிடிக்கும் ஒரு புகைப்படத்தை ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது படக்குழு வெளியிட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்