இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. துவக்கத்தில் உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் பெரிய அளவில் நடிகராக வரவேற்பை பெறவில்லை. அதனால் இயக்குனராக அவர் முடிவு செய்தார்.
அதன்பிறகு லோக்கல் பாய்ஸ் கிரிக்கெட் விளையாடும் கதைக்களத்தில் சென்னை 28 படத்தை உருவாக்கினார். படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. தொடர்ந்து இயக்குனராக தன் பயணத்தை தொடர்ந்த வெங்கட்பிரபு சரோஜா கோவா மங்காத்தா சென்னை 28 படம் 2ம் பாகம் மாசு என்கிற மாசிலாமணி மாநாடு உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
இதில் மாசு என்கிற மாசிலாமணி படம் மட்டுமே சரியாக போகவில்லை. அஜீத்குமார் நடித்த மங்காத்தா சிம்பு நடித்த மாநாடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து கடந்தாண்டில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் வெங்கட்பிரபுவுக்கு பெரிய வெற்றிப் படமாக இருந்தது.
இந்நிலையில் அடுத்து அஜீத்குமார், சிவகார்த்திகேயன் படங்களை இயக்கும் திட்டத்தில் இருந்த வெங்கட்பிரபுவுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் ஏஆர் முருகதாஸ் சிபி சக்ரவர்த்தி சுதா கொங்கரா படங்களுக்கு பிறகே உங்களுக்கு கால்ஷீட் தர முடியும். 2025ம் ஆண்டு இறுதி வரை வெயிட் பண்ணுங்க என சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபுவை வெயிட்டிங்கில் வைத்து விட்டார்.
நடிகர் அஜீத்குமார் விடாமுயற்சி குட் பேட் அக்லி படங்களை தொடர்ந்து துபாயில் நடந்துவரும் கார் பந்தயத்தில் பிஸியாகி விட்டதால், அவரையும் இயக்க வாய்ப்பில்லை. இந்த சூழலில் சென்னை 28 படத்தின் 3ம் பாகத்தை இயக்க தயாராகி விட்டார். இந்த படத்தில் அவரது 15 பேர் கொண்ட மிர்ஷி சிவா விஜய் வசந்த் பஞ்சு சுப்பு வைபவ் உள்ளிட்டோர்தான் நடிக்க வேண்டும்.
ஆனால் அவரது நண்பர் குழுவில் பாதி பேர் அவரது நட்பில் இல்லாமல் பிரிந்து விட்டனர். அவர்களது மொபைல் எண்கள் கூட வெங்கட்பிரபுவிடம் இல்லாத அளவுக்கு நட்பில் விரிசல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர். குறிப்பாக பஞ்சு சுப்பு, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் போன்றவர்கள் பல மாதங்களாக பேசுவதே இல்லை. அதனால் பிரிந்து சென்ற நண்பர்களால் சென்னை 28 படம் 3ம் பாகம் உருவாக்குவதில் இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.





