- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் 50 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? தயாரிப்பு நிறுவனம் ஹீரோ, டைரக்டரை நம்பலையே? -...

எஸ்டிஆர் 50 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? தயாரிப்பு நிறுவனம் ஹீரோ, டைரக்டரை நம்பலையே? – இது நியாயமா என வருத்தப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிலம்பரசன். மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் சிம்பு நடித்த தக்லைப் படம் வருகிற ஜூன் 5ம் தேதி வர இருக்கிறது. இதற்கிடையே சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 எஸ்டிஆர் 50 எஸ்டிஆர் 51 படங்கள் குறித்த அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இதில் எஸ்டிஆர் 59 படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் புனேவில் துவங்க உள்ளது.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 50 படம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 150 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை அட்மின் சினி ஆர்ட்ஸ் சொந்தமாக தயாரித்தாலும், உண்மையில் இந்த படத்தை தயாரிக்கப்படுவது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான்.

ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்டிஆர் 50 படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஒரு தகவல் பரவி வந்த நிலையில், அது முற்றிலும் தவறான தகவல், வதந்தி என்பதும் உறுதியாகி உள்ளது. நடிகர் சிம்புவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் அட்மின் சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் சேர்ந்தே இந்த படத்தை தயாரிக்கின்றன.

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் போன்ற படங்களை தயாரித்தது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்று வசூலை குவித்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு முக்கியமான கண்டிஷனுடன்தான் இந்த படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் ஒத்துக்கொண்டுள்ளது. அதாவது எஸ்டிஆர் 50 படத்துக்காக 10 நாட்கள் டெஸ்ட் ஷூட் நடத்தப்பட வேண்டும். அந்த டெஸ்ட் ஷூட்டில் படத்தை பற்றிய கண்டென்ட் வந்துவிட வேண்டும்.

அந்த கண்டென்ட் வீடியோவை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திடம் போட்டுக் காட்டி, அவர்கள் நல்ல விலைக்கு இந்த படத்தை வாங்குவதாக சொன்னால் இந்த படத்தின் தயாரிப்பை தொடர்வோம். இல்லை என்றால் விலகிக் கொள்கிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து, எஸ்டிஆர் 50 படத்தை தயாரிக்க ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. படத்தின் ஹீரோ, டைரக்டரை நம்புவதை விட டிஜிட்டல் ரைட்ஸ் விலை தரும் ஓடிடி நிறுவனங்களை தயாரிப்பு நிறுவனம் பெரிதாக நம்பும் நிலைதான் இப்போது தமிழ் சினிமாவில் நிலவுகிறது.

சற்று முன்