- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு இப்படி ஒரு பிரச்னையா? கோர்ட் வழக்கில் சிக்கிய ஜனநாயகனுக்கு விழுந்த அடுத்த அடி...

நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு பிரச்னையா? கோர்ட் வழக்கில் சிக்கிய ஜனநாயகனுக்கு விழுந்த அடுத்த அடி – அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் சென்சார் போர்டு தரப்பில் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இப்போது கோர்ட் வழக்கில் ஜனநாயன் படம் சிக்கியுள்ளது.

ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்காதது குறித்து சென்சார் போர்டு தரப்பிலும், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் வாதங்கள் வைத்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு ஒத்தி வைத்துள்ளது. அதனால் எப்போது தீர்ப்பு வரும் என்றே தெரியவில்லை.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் விஜய் நடிகராக மட்டுமின்றி அரசியல் தலைவராகவும் இருப்பதால் தான் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்காமல் மத்திய அரசு பல நெருக்கடிகளை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே வெளியாகி தேசிய விருது பெற்ற பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீ மேக் தான் ஜனநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சில காட்சிகள் அரசியல் ரீதியாக மத்திய மாநில அரசுகளை விமர்சிக்கும் விதமாகவும் அதே நேரத்தில் மத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாகவும் இருப்பதால் மும்பையில் உள்ள மறு ஆய்வுக்குழு படத்தை முழுமையாக தணிக்கை செய்த பிறகே படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க முடியும் என்றும் தணிக்கை வாரியம் கோர்ட்டில் தெளிவாக கூறியுள்ளது.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படத்துக்கு இப்போது மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. அதாவது இந்த படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த படம் கடந்த 9ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருந்தால் 28 நாட்களுக்கு பிறகு அதாவது 4 வாரங்கள் கழித்து ஓடிடியில் ரிலீஸ் ஆக வேண்டும்.

ஆனால் இப்போது 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை. இனி எப்போது ரிலீஸ் என்றும் தெரியவில்லை. நியாயமாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என்றால் பிப்ரவரி 6 தேதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜனநாயகன் வெளியாக வேண்டும். ஆனால் இது நடக்க வாய்ப்பில்லை என்பதால் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கடி தந்து வருகிறது. இதற்காக தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும். இல்லை என்றால் ஒப்பந்தத்தை மீறியதற்காக சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க நேரிடும் என்றும் அமேசான் பிரைம் நிறுவனம் எச்சரித்துள்ளது.

- Advertisement -

சற்று முன்