நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்த நிலையில் சென்சார் பிரச்னை காரணமாக படம் வெளியாகவில்லை. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக மும்பையில் உள்ள மறுஆய்வுக்கு குழுவின் பார்வைக்கு படம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் கடந்த 20ம் தேதி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும், சென்சார் போர்டு தரப்பிலும் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது. இந்த சூழலில் 22ம் தேதி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
நாளை 23ம் தேதியும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. நாளைய வழக்கு விசாரணை லிஸ்ட்டில் ஜனநாயகன் படம் குறித்த வழக்கு இல்லாத நிலையில், நாளையும் இந்த விசாரணை நடக்காது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்கள், திங்கட்கிழமை குடியரசு தினம் என்பதால் அன்றும் கோர்ட் விடுமுறை நாளாகும்.
அதனால் வருகிற 27ம் தேதி செவ்வாய் கிழமை ஜனநாயகன் படம் குறித்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அமர்வில் வர அதிக வாய்ப்புள்ளது. அப்படி வரும் போது ஒருவேளை ஜனநாயகன் படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிபதிகள் உத்தரவு இருக்குமானால் 29ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதனால் ஜனவரியில் ஜனநாயகன் ரிலீஸ் என்பது வருகிற 27ம் தேதி இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் பட்சத்தில் விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கலாம். இப்போது திரைக்கு வந்துள்ள டிடிடி படம் தவிர மற்ற 2 படங்களும் பராசக்தி வா வாத்தியார் படங்களை உடனே தூக்கிவிட்டு ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யவும் தியேட்டர் உரிமையாளர்கள் தயாராக உள்ளனர்.
ஒருவேளை வருகிற செவ்வாய்கிழமை 27ம் தேதி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் அடுத்த பிப்ரவரி மாதத்தில் ஜனநாயகன் வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் 4 வாரங்கள் வரை படத்தை தணிக்கை செய்ய சென்சார் போர்டு கால அவகாசம் கேட்டிருப்பதால் இன்னும் ஒரு மாதம் வரை படம் தள்ளிப் போகவும் அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 வரை கூட ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.





