- Advertisement -
Homeபொழுதுபோக்குஆர்வமாக கதை சொன்ன இயக்குநர், குறட்டை விட்டு தூங்கிய தயாரிப்பாளர் - ரஜினி பட டைரக்டருக்கே...

ஆர்வமாக கதை சொன்ன இயக்குநர், குறட்டை விட்டு தூங்கிய தயாரிப்பாளர் – ரஜினி பட டைரக்டருக்கே இப்படி ஒரு சோதனையா?

- Advertisement -

தமிழ் சினிமாவில், நல்ல நல்ல கதைகளை உருவாக்கும் இயக்குநர்கள், அதை படமாக்க வேண்டும் என்றால், லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் அதற்காக செலவு செய்ய தயாரிப்பாளர் வேண்டும். எனவே, தயாரிப்பு நிறுவனங்களை அணுகி, அந்த கதையை சொல்லி ஓகே வாங்க வேண்டும். அப்போதுதான் அந்த கதை, திரைப்படமாக உருவாவது சாத்தியம்.

இப்படி தயாரிப்பாளர்களிடம் கதை சொன்ன இயக்குநர்களுக்கு வெவ்வேறு விதமான அனுபவங்கள் இருக்கும். அதே போல், நடிகர்களுக்கு கதை சொல்லப் போய் கிடைத்த அனுபவங்களும் நிறைய இருக்கும். இயக்குநர் கதை சொல்கிறபடி அதை படமாக்கி விட்டால், அதுவே பாதி வெற்றியை தந்துவிடும்.

பெரும்பாலும், நல்ல கதைகளை படமாக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இன்றைய காலகட்டத்தில் விரும்புவதில்லை. கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் படங்களை தரவேண்டும். பெரிய நடிகர்களுக்கான கதையை உருவாக்கி அதன்மூலம் விரைவிலேயே பேரும், புகழும் குறிப்பாக பல கோடிகள் சம்பளம் என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் சினிமா இயக்குநர்களின் மிக முக்கியமானவர். பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட முக்கிய ஹிட் படங்களை தந்தவர். குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம், பெரிய வெற்றியை பெற்றது. இப்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில், ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், எனக்கு மற்ற இயக்குநர்களை போல, கதை சொல்ல தெரியாது. கதையை எழுதிக்கொண்டு போய் படித்துச் சொல்வேன். அல்லது, அந்த படத்தை தயாரிக்க உள்ள தயாரிப்பாளர், ஹீரோவாக நடிக்க உள்ள நடிகரிடம் கொடுத்து, படிக்கச் சொல்வேன். ரஜினி சாரிடம் அப்படி எழுதிய கதையை கொடுத்த போது, நீங்களே சொல்லுங்க என்றார். அவ்வளவா கதை சொல்ல வராது என்று கூறியும், நீங்களே சொல்லுங்க என்க,பேட்ட படத்தின் கதையை சொல்லி முடித்தேன். நல்லா கதை சொல்றீங்களே, என பாராட்டினார்.

இதேபோல், வேறோரு அனுபவமும் எனக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் ஜிகர்தண்டா படத்தை எடுப்பதற்காக. ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல சென்றேன். கதையை சொல்ல சொல்ல சிறிது நேரத்தில் அவர் தூங்கி விட்டார். பிறகு, திடீரென விழித்து, நான் துாங்கவில்லை, கதை சொல்லுங்க என்றார். பிறகு ஒரே நிமிடத்தில் அவரிடம் கதையை சொல்லி முடித்துவிட்டு வந்துவிட்டேன். அந்த படத்தை அவர் தயாரிக்கவில்லை. வேறொரு தயாரிப்பாளர் தான் தயாரித்தார் என்று கூறியிருக்கிறார். ஜிகர்தண்டா மிகப்பெரிய ஹிட் படமாக, கார்த்திக் சுப்புராஜூக்கு அமைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்