- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை நாங்கள் வெளியிட முடியாது… திடீரென பின்வாங்கிய தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் -...

ஜனநாயகன் படத்தை நாங்கள் வெளியிட முடியாது… திடீரென பின்வாங்கிய தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் – அந்த ஹீரோக்கள் குறுக்கீடுதான் காரணமா?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக விஜய் உள்ள நிலையில் அவர் நடித்த ஜனநாயகன் படத்துக்கு பலவிதங்களில் தொடர்ந்து தடைகளும் இடையூறுகளும் சிக்கல்களும் வந்துக்கொண்டே இருக்கின்றன. இது அவரது கடைசி படம் என்ற நிலையில் குறுக்கீடுகள் தொடர்ந்து வருகின்றன.

ஜனநாயகன் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. நாளை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடக்க உள்ளது. இதற்காக நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று மதியம் விமானத்தில் மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.

- Advertisement -

திமுகவை தீயசக்தி என்ற சமீபத்தில் நடிகர் விஜய் விமர்சித்த நிலையில் திமுக அவர் மீது கடுமையான கோபத்தில் உள்ளது. அதனால் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்த பராசக்தி படத்தை அதற்கு முன்பாக ஜனவரி 10ம் தேதியே ரிலீஸ் செய்கிறது. இதனால் ஜனநாயகன் படத்தின் வசூல் கண்டிப்பாக பாதிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீஸ் செய்ய அங்குள்ள சிதாரா எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் வினியோக அடிப்படையில் ரூ. 9 கோடி விலைக்கு ஜனநாயகன் படத்தை வாங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் இப்போது ஜனநாயகன் படத்தை நாங்கள் வெளியிட முடியாது என்று கூறி திடீரென பின்வாங்கி விட்டது.

- Advertisement -

அதற்கு காரணம் என்னவென்றால் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி பிரபாஸ் மற்றும் வெங்கடேஷ் என பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்த 3 படங்கள் வருகிற பொங்கலுக்கு ஆந்திரா தெலங்கானாவில் ரிலீஸ் ஆகிறது. அத்துடன் மேலும் 3 புதிய படங்களும் என மொத்தம் 6 படங்கள் ரிலீஸாக உள்ளன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல அங்கு சங்கராந்தி என்ற பெயரில் தெலுங்கில் கொண்டாடுகின்றனர். அதனால் சங்கராந்தி விழாவை முன்னிட்டு 6 படங்கள் வெளியாகின்றன. அந்த படங்களுக்கே போதிய தியேட்டர்களே ஒதுக்கீடு இல்லாததால், சிதாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பின்வாங்கி விட்டது. இந்த சூழ்நிலையில், பிவிஆர் நிறுவனம் ஜனநாயகன் படத்தை ஆந்திரா தெலுங்கானாவில் வெளியிட முன்வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்