- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு இவ்வளவு கோடி ஷேர் கொடுத்துருங்க- விஜய் சொன்ன வார்த்தையால் அதிர்ந்துபோன தயாரிப்பு நிறுவனம், சாதுரியமாக...

எனக்கு இவ்வளவு கோடி ஷேர் கொடுத்துருங்க- விஜய் சொன்ன வார்த்தையால் அதிர்ந்துபோன தயாரிப்பு நிறுவனம், சாதுரியமாக முடிவெடுத்த தயாரிப்பாளர், ஓஹோ இதுதான் விஷயமா?

- Advertisement -

“லியோ” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் “தளபதி 68” திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். இதில் வயதான தந்தை கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க உள்ளாராம்.

ஆதலால் மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Institute of creative technology என்ற மையத்திற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் விஜய்யை அழைத்துச் சென்றுள்ளனராம்.

- Advertisement -

அங்கே விஜய்யின் உடலை முழுவதுமாக ஸ்கேன் செய்து, அந்த ஸ்கேன் செய்யப்பட்ட உருவத்தை வைத்து வயதான கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக எப்படி உருவாக்கலாம் என திட்டமிட உள்ளார்களாம்.

இத்திரைப்படத்தில் தந்தை விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க உள்ளார் எனவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதே போல் மகன் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்க உள்ளார்  எனவும் ஜெய்க்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

விஜய் “தளபதி 68” திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இதன் பின்னணியை குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அதாவது “தளபதி 68” புராஜெக்ட்டில் விஜய் ஒப்பந்தமான போது, “100 கோடி சம்பளமாகவும் இத்திரைப்படம் வெளியான பின்பு வரும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கையும் கொடுத்துவிடுங்கள்” என கேட்டாராம். இதை கேட்டதும் ஏஜிஎஸ் நிறுவனம் அதிர்ந்துபோய்விட்டதாம். இதற்கு பதிலாகத்தான் ரூ.200 கோடி சம்பளம் தருவதாக ஏஜிஎஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. விஜய்யும் அதற்கு ஒப்புக்கொண்டுவிட்டாராம்.

- Advertisement -

சற்று முன்