- Advertisement -
Homeபொழுதுபோக்கு14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கு செல்லும் நடிகர் விஜய் - இது என்னப்பா, இது...

14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அங்கு செல்லும் நடிகர் விஜய் – இது என்னப்பா, இது லிஸ்ட்டுலயே வராத புது டிவிஸ்ட்டா இருக்குது

- Advertisement -

அரசியல் கட்சி தலைவரான பிறகு நடிகர் விஜய், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு அசைவும் மீடியாவில் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவர் என்ன சொன்னாலும் செய்திதான், அவர் என்ன செய்தாலும் செய்திதான் என்கிற அளவுக்கு, தமிழக அரசியலில் அவருக்கான முக்கியத்துவம் அதிகரிக்க துவங்கி விட்டது.

அதுவும் அவரது கட்சியில் உறுப்பினராக சேர, ஒரே ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இப்போது 50 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள், அந்த செயலி வாயிலாக, தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இணைந்துவிட்டதாக தகவல் வைரலாகி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இன்னும் விஜய் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் என எதையுமே அறிவிக்கவில்லை. அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ள கட்சியில் முதல் மாநில மாநாட்டில் தான் இதுபற்றி எல்லாம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். அதற்கு முன்பே விஜய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அமோகமாக இருக்கிறது.

இதற்கிடையே விஜய் இப்போது நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தொடர்ந்து மேலும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அந்த படத்தை இயக்கப் போவது, ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம்தான். ஆனால் படத்தை இயக்கப் போவது திரிவிக்ரமா, எச் வினோத்தா என்பது குறித்து விரைவில் விஜய் அறிவிக்க இருக்கிறார்.

- Advertisement -

இப்போது விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய நிலையில், சில தினங்களுக்கு முன், படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு, கேரளா சென்று திரும்பி வந்தார். அங்கு அவர் படப்பிடிப்பு நடத்த லொக்கேஷன் பார்த்துவிட்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நாளை நடிகர் விஜய், டைரக்டர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படப்பிடிப்புக்குழு, கேரளா மாநிலம், திருவனந்தபுரம் செல்ல உள்ளது. அங்கு சில தினங்கள் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அங்கிருந்து சென்னை திரும்பிய பிறகு, ரஷ்யா செல்கின்றனர். விஜய் அசின் நடித்த காவலன் படம் கேரளாவில் நடந்தது. அதன்பிறகு 14 ஆண்டுகள் கழித்து, மீண்டும் கேரளா செல்கிறார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்