விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் Pre Production பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்குப் பல ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை செப்டம்பரில் நடத்த படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த பிளான் போட்டது படக்குழு.
மேலும் சமீப நாட்களாக சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் விஜய், “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் “லியோ” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடைபெறவில்லை எனவும் மலேசியா நாட்டில்தான் நடைபெறுவதாகவும் தற்போது செய்திகள் வருகின்றன. ஆதலால் விஜய் ரசிகர்கள் பலரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் “லியோ” ஆடியோ வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டதற்கான காரணம் ஒன்றை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது வலைப்பேச்சு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“லியோ ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் அதற்கு முன்னால் நடந்த விஷயம்தான் ஆச்சரியமான ஒன்று. அதாவது முதலில் மதுரையில் நடத்துவதாகத்தான் முடிவு செய்யப்பட்டது.
குறைந்தது 50,000 பேராவது வருவார்கள், அதற்கான ஏற்பாட்டையும் செய்வதற்கான வேலைகள் நடந்தது. ஆனால் விஜய் அரசியல் நுழைவு சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் நாளைய முதல்வர் விஜய் என்பது போல் போஸ்டர்கள் அடித்து இந்த படத்தின் மீது சர்ச்சையை உண்டு செய்துவிடுவார்களோ என்று பயந்தார்களாம். அதனால்தான் எதுக்கு வம்பு என்று மலேசியாவில் நடத்த முடிவு செய்துவிட்டார்கள்” என்று பிஸ்மி கூறியுள்ளார்.




