லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடந்த 19ம் தேதி லியோ படம் வெளியானது. படம் வெளிவந்த 12 நாட்களில், 540 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது. இதையடுத்து, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில், லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்று பேசினா். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழா குறித்து, நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, லியோ பட விழாவில், விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. இதற்கு திரிஷாதான் காரணம். திரிஷா வந்தால், விழாவுக்கு நான் வரமாட்டேன் என்று கூறியும் திரிஷா வந்ததால், சங்கீதா வரவில்லை. படத்தில், திரிஷாவுக்கு விஜய் லிப்லாக் கொடுத்ததும், வீட்டில் பெரிய பிரச்னையாக வெடித்திருக்க வாய்ப்புள்ளது.
லியோ படத்தின் வெற்றிவிழா என்பது மிகப்பெரிய பொய். அங்கு நடந்தது விஜய் மக்கள் மன்றம், ரசிகர்களின் சந்திப்பு கூட்டம்தான். வழக்கமாக புஸ்லி ஆனந்த் மட்டுமே, ரசிகர் மன்ற கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறாரே என்பதற்காக, ரசிகர்களிடம் விஜய் பேசுவதற்காக, தயாரிப்பாளர் செலவில் நடத்தப்பட்ட ஒரு விழாதான் இது.
லியோ வெற்றி விழா என்றால், படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர்களுக்கு ஷீல்டு கொடுத்திருக்க வேண்டும். அதெல்லாம் எதுவும் செய்யவில்லை. இந்த விழாவுக்கு ரஜினி, கமல் கலந்துக்கொண்டு இருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், விஜய் ரசிகர் மன்ற கூட்டமாக நடந்ததால், இதில் நாங்கள் ஏன் பங்கேற்க வேண்டும் என்றுதான் அவர்கள் வரவில்லை.
இந்த விழாவுக்கு படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் வரவில்லை. முறைப்படியாக அழைத்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமின்றி, இது ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக நடத்தப்பட்டதால், அனிரூத் ஏன் வரவேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம்.
விஜயை பொருத்தவரை, ரசிகர்களை சந்தித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இதை நினைத்தார். நினைத்ததை அவர் நிறைவேற்றிக்கொண்டார். அதுதானே தவிர, நடந்தது லியோ படத்தின் வெற்றி விழா அல்ல. விஜய் ரசிகர் மன்ற மாநாடு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் சந்திப்பு கூட்டம் என்பதே உண்மை என்று கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.





