- Advertisement -
Homeபொழுதுபோக்குகார் ரேஸ் எல்லாம் இல்லையாம்... அஜித் அடுத்த இரண்டு படங்களுக்குப் பிறகு வேறு படங்களில் ஒப்பந்தம்...

கார் ரேஸ் எல்லாம் இல்லையாம்… அஜித் அடுத்த இரண்டு படங்களுக்குப் பிறகு வேறு படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கு இதுதான் காரணமாம்…

- Advertisement -

துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ஒரு வருடம் ஆகியும் இப்போது வரை பணிகள் நிறைவடைந்ததாக தெரியவில்லை.

 

- Advertisement -

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம், நிதி சுமை காரணமாக தள்ளாடுவதாக கூறப்படுகிறது. எனினும் படம் தாமதமாவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இப்படியான சூழலில் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அஜித் குமார்.

 

- Advertisement -

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் எடுக்கும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கத்திற்கு மாறாக, வேறு ஒரு அஜித்தை திரையில் பார்க்கலாம் என்பது அதன் போஸ்டரை பார்க்கும்போதே உறுதியாகிவிட்டது.

 

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் எடையை குறைந்து, ஸ்மார்ட் ஆக காட்சி அளிக்கிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா படத்தில் இருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனிலும் இடம் பெற்றுள்ளார்.

 

வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தேதியில் விடாமுயற்சி படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதே போல், கோடை விடுமுறைக்கு குட் பேட் அக்லி வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் முழுக்க முழுக்க கார் ரேஸில் ஈடுபட முடிவெடுத்துள்ளார்.

 

அதேசமயம் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பிறகு அஜித் அதிக அளவு சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த ஊதியத்தை எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும் கொடுக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அஜித்குமார் அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆவதற்கு தாமதமாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்